புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 

காஜல் புகழ்

காஜல் புகழ்

ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில், காஜலின் நடிப்பை பார்த்து புகழ்கிறார் அப்படத்தின் டைரக்டர் ராஜேஸ். சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய ராஜேஸ் இயக்கி வரும் புதிய படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா இப்படத்தில் கார்த்தி ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.

ராஜேஷின் எல்லா படங்களை போல இந்தப் படத்திலும் சந்தானம் கொமெடியில் கலக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷ¥ட்டிங் பொள்ளாச்சி மற்றும் கும்பகோணம் பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட ஷ¥ட்டிங்கை எடுத்து முடித்து இருக்கும் ராஜேஷ் கூறுகையில்:- ஆல் இன் ஆல் அழகு ராஜா படம் குடும்பம் சம்பந்தமான படம். ஏற்கனவே நான் மகான் அல்ல படத்தில் குடும்ப கதைகளில் கார்த்தி நடித்துள்ளதால் இந்தப் படத்திலும் கார்த்தி அற்புதமாக நடித்து வருகிறார்.

கார்த்தியுடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம் என்றார். மேலும் காஜல் பற்றி கூறும்போது, காஜலின் நடிப்பை பார்த்து நானே வியந்து போனேன். ஒருமுறை அவரிடம் டயலாக் சொல்லிவிட்டால் போதும் அதை அப்படியே உள்வாங்கி அருமையாக நடித்து கொடுத்து விடுவார். நடிப்பில் அவர் காட்டும் ஈடுபாட்டால் தான் அவரது படங்கள் தொடர் ஹிட்டாகியுள்ளன என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.