புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
முல்லைத்தீவில் இந்து ஆலயங்கள் புனரமைப்பு

முல்லைத்தீவில் இந்து ஆலயங்கள் புனரமைப்பு

ஜனாதிபதி பதவியேற்ற MP வருடங்கள்;

மல்லாவியில் சிறிதரன் ணிஜி பங்கேற்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஜனாதிபதியின் 67ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்கள் புனரமைக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டும் ஜனாதிபதியின் 67ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் நாடு முழுவதிலும் சகல சமய வழிபாடுகளை “கிருவாபத்துவென் தல் அருண ட்ட” என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள சகல மாவட்டங்களிலும் சர்வ சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் தமிழ் மக்களின் சமய வழிபாட்டுக்காக முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில் களை புனர மைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி நான்காம் யூனிற் முருகன் ஆலயம் மற்றும் யோகபுரம் சிவன் ஆலயத்தில் இறைவிக்கி ரகங்களை பிரதிஷ்டை செய்வதற் கான அடிக்கல் நாட்டு வைபவ ங்கள் ஆலய பரிபாலன சபை யினர் மற்றும் அப்பகுதி வர்த் தகர்கள், அடியார்களின் துணை யுடன் நல்லை ஆதினகுரு முதல்வர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இங்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் மற்றும் பாண்டியன் குளம் பிரதேசசபையின் தலைவர் தனிநாயகம், உப தவிசாளர் செந்தூரன் மற்றும் துணுக்காய் பிரதேசசபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைபவத்தில் நல்லை ஆதின முதல்வர் அருளுரை யாற்றி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.