புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
மழையோடு மழையாக தேன்மாரி பொழிந்த ஈழத்து இசைமுரசு கலைக்கமலின் 28 ஆவது கீத்ராத்!

மழையோடு மழையாக தேன்மாரி பொழிந்த ஈழத்து இசைமுரசு கலைக்கமலின் 28 ஆவது கீத்ராத்!

அன்று விடியற் காலை முதல் மாலை வரை விடாத மழை!

யார் விரும்புவார் நிகழ்ச்சி நடத்த?

சனம் வருமா? செலவு செய்த பணம் சேருமா? என்று

மனம் பதறும் ஆனால்.....

எந்தக் கவலையும் இல்லாமல் அடைமழையோடு மழையாக கடந்த 29ஆம் திகதி கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்தன மண்டபத்தில் கலைக்கமல் 28ஆவது கீத்ராத் நிகழ்ச்சியை இடி - இசை முழக்கத்துடன் அதிரடியாக நடத்தி ரசிகர்களை மகிழவைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், செனட்டர் மஷ¤ர் மெளலானா, லேக் ஹவுஸ் ஆசிரியப் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தே. செந்தில்வேலவர், அக்கரைப்பற்று ஏ.பி.அப்துல் கையூம், புரவலர் ஹாஸிம் உமர், அஷ்ரப் ஹுசைன், கே.அரசரட்ணம், அஷ்ஷெய்க் முபாறக் மெளலானா, எம்.எஸ்.தாஜ்மஹான் எனப் பிரபல பிரமுகர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

“அல்லாஹ்வை நாம் தொழுதால்” முதல் எல்லாப் பாடல்களுமே இதயம் தொட்டன. ‘இசைமுரசு’ நாகூர் ஹனிபாவின் உச்ச ஸ்தாயி பாடல்களை அநாயாசமாக - அற்புதமாக களைப்பில்லாமல் பாடினார் பாடகர் கலைக்கமல்.

புதிய ரசிகர்கள் வியந்து பார்த்தார்கள். தொடர்ந்து பார்த்தவர்களும் மேலும் மகிழ்ந்து போனார்கள். “சமூகஜோதி” றபீக், கலைஞர் கலைச்செல்வன், கவிமணி நஜ்முல் ஹுசைன், நூருல் அயின், அந்தனி ஜீவா, “கவித்தென்றல்” அலி அக்பர், யாழ். அkம், எம்.எஸ்.எம்.ஜின்னாஹ், கைரியா இஸ்மாயில் எனப் பிரபல கலைஞர்கள் இலக்கிய ஜாம்பவான்கள் பெரும் பட்டாளமே கமலின் பாட்டுக்காக படையெடுத்திருந்தனர்.

விசேட அதிதியாகக் கலந்துகொண்ட லேக் ஹவுஸ் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத் சிந்தைக்கினிய தமிழில் சிறப்பாகப் பேசினார். கமலின் திறமையைப் பாராட்டினார். கலைத்துறைக்காக பிரபல எழுத்தாளர் ஆய்வாளர் மானாமக்கீன், திரை இசைய மைப்பாளர் எம்.எஸ். செல்வராஜா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.

சமூக சேவைக்காக அஷ் ரப் உசைன், எலைட் இப்திகார் அஹமத், காலித் பவுண்டேஷன் தலைவர் இம்ரான் காலித், எம். ஆர்.எம்.ராபிக் - ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர். முதல் இறுவட்டை பிரபல தொழிலதிபர் பின்ஹசன் காலித் பெற்றுக்கொண்டார்.

பெருநாள் சிறப்பு கீத்ராத்தில் இம்முறை பிரபல பாடகர்களான மொஹிதீன் பேக் மகள் மொய்னா பேகம், டோனி ஹசன் மகள் ஸமீரா ஹசன், மஹ்தூம் ஏ.காதர் வாரிசு உபைத் மஹ்தூம் பாடல்களும் இடம்பெற்றன.

“இசைமுரசு” பாடல்களைத் தந்த கலைக்கமல் நம் நாட்டுப் பாடல் ஆசிரியர்களின் பாடல்களையும் மேடையில் அரங்கேற்றியது வரவேற்புப் பெற்றதாக அமைந்தது. கலைக்கமலின் இசையில் நஜ்முல் ஹுசைன், யாழ். ஹkம், காத்தான்குடி பெளஸ், எம்.எஸ்.என்.ஜின்னாத் இயற்றிய ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் நேத்ராவில் ஒளிபரப்பான பாடல்கள் கீத்ராத்தில் இடம்பெறச் செய்து உள்ளூர் படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்த கலைக்கமலுக்குப் பாராட்டுக்கள்.

இந்திய பாடல்களின் தரத்திற்கு இந்தப் பாடல்கள் இணையாக இருந்தன. “இந்தியாவிலும் இலங்கையிலும் பல விருதுகளையும், கெளரவங்களையும் பெற்றுள்ளேன். ஆனாலும் கலைக்கமலின் கீத்ராத் கெளரவமே எனக்கு எல்லாவற்றையும் விட மேலானது. ஒரு கலைஞனால் இன்னொரு கலைஞனுக்கு வழங்கப்படுகின்ற உயரிய கெளரவம்” என்று உணர்ச்சி பூர்வமாக உரையாற்றினார் எழுத்தாளர் மானா மக்கீன்.

“கலைநிலா” உவைஸ் ஷெரீப் நிகழ்ச்சியை திறமையாகத் தொகுத்து வழங்கினார்.

அப்பாடா.......! கொட்டும் இந்த அடை மழையிலும் கீத்ராத்துக்கு இவ்வளவு பெரிய கூட்டமா?

இடி, மின்னல், மழையானாலும் “கீத்ராத்” கலைக்கமலுக்கு நம்பிக்கையும் இதற்கென்றே ஒரு பெரும் ரசிகர் கூட்டமும் அதிகம் அதிகம் என்பது யதார்த்தமான உண்மை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.