ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

பூமியின் உட்பகுதிகள்

பூமியின் உட்பகுதிகள்

பூமிக்குள் என்ன உள்ளது, புராணக் கதைகளில் வரும் இருண்ட உலகமும் அதில் வாழும் ராட்சகர்களும் போன்று ஏதாவது உள்ளதா என்றால் கொஞ்ச ஆழங்களில் வாழும் சில பூச்சிகள் தவிர வேறொன்று மில்லை.

ஆனால் நதிகள் போன்ற தண்ணீர் பாயும் இடங்களுண்டு. பூமியின் உட்பகுதி பல அடுக்குகளாக அமைந்துள்ளது.

நடுப்குதி நெருப்புக் குழம்பு தகிக்கும் குளமாகக் காணப்படுகிறது. மேலும் இரும்புத் தாதுக்களும் மற்ற தனிமங்களும் நிரம்பியுள்ளன.

பூமியின் நடுப்பகுதி
(INNER CORE):

இதில் இரும்பும் நிக்கலும் கொதித்துக் கொண்டுள்ள குழம்பு நிலையிலுள்ளது.

இதன் அகலம் 2,740 கி.மீ. கொண்டது. இது பூமியின் மேற்பாகத்திலிருந்து சுமார் 5000 கி.மீ. ஆழத்தில் உள்ளது.

இக்குழம்பிலிருந்து சில சமயம் பீறிட்டுக் கிளம்பும் பகுதிகள் உலகின் சில இடங்களில் எரிமலையாக வெளியேறுகின்றன.

வெளிச் சுற்று
(OUTER CORE):

நடுக் குழம்புப் பகுதிக்கும் மேலடுக்கும் இது. இரும்பும் நிக்கலும் உள்ளது. இது பூமியின் மேற்பகுதியிலிருந்து சுமார் 2000 கி.மீ. ஆழத்தில் அமைந்துள்ளது.

நடுச் சுற்று
(MONTLE LAYER): 

பூமியிலிருந்து சுமார் 2,900 ஆழமுள்ளது. இப்பகுதி ஈர்ப்பு விசை (MAGNETIC FORCE) உண்டாகக் காரணமாக உள்ளது.

மேல் சுற்று
(CRUST):

இது பூமியின் மேலுள்ள திடப்பகுதியாகும். இது பாறைகளாலானது. இதன் ஆழம் 6 லிருந்து 70 கி.மீ. வரை உள்ளது.

பூமியின் காற்று மண்டலம்
(ATMOSHERE):

பூமியின் மேல் பகுதியான இந்த அடுக்கு சுமார் 640 கி.மீ. உயரம் கொண்டதாகும்!

முழுப் பூமியின் பரிமாணம்:

பூமி ஒழுங்கற்ற ஓர் பந்து போல உள்ளது. பூமியைத் தெரிந்து கொள்ளும் வசதிக்காக நிலவியல் வரை படமாக முன் பக்கம் தரப்பட்டுள்ளது.

இதில் வரும் கோடுகள் நிலங்களைப் பிரித்தறியக் கற்பனையாக நிலவிய லாளர்களால் தயாரிக்கப்பட்டவையாகும்.

பூமியின் வட, தென் பகுதி இரு துருவங்களாக அறியப்பட்டுள்ளது.

அங்கிருந்து கீழே செல்லும் கோடு (LONGITUDE LINES) செங்குத்துக் (VERTICAL LINES) கோடு எனப்படும்.

குறுக்காகச் செல்லும் கோடு (LATITUTE LINES) எனப்படுகிற இக்கோடுகளுக்கு முறையே கடக ரேகை மற்றும் மகர ரேகை போன்ற துணைக் கோடுகளும் உண்டு.

இவை நிலவியல் அறிவியலின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டன.

வட துருவம் 70 டிகிரி பாகையும் வடதிசை 100 டிகிரி பாகையும் கொண்டது.

அது போலத் தென் துருவம் 68 டிகிரி பாகையும் கிழக்குத் திசை 143 டிகிரி பாகையும் கொண்டதாகும்!

வட, தென் துருவங்கள் வாயிலாகப் பூமியினுள் உள்ள இரும்புத் தாதுக்களால் காந்தக் கவர்ச்சி உருவாகிறது.

இதை ஓர் காந்த ஊசி மூலம் அறிய முடியும். துருவ விலக்கு காந்தமுனைகளில் ஏற்படுவதால் காந்த ஊசி எப்போதும் வட, தென் திசை நோக்கியே இருக்கும்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி