மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03
SUNDAY MARCH 13, 2016

Print

 
மலையகத்தில் இன்று கையெழுத்து வேட்ட

மலையகத்தில் இன்று கையெழுத்து வேட்டை

சம்பள உயர்வு கோரி JVP ஏற்பாடு

மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று ஞாயிறு ஒரே நேரத்தில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ள இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையானது இன்று காலை 10 மணியளவில் இராகலை, இரத்தினபுரி, மாத்தறை, தெனியாய, கேகாலை, பலாங்கொடை, புலத்ஹோப்பிட்டிய, அட்டன், தலவாக்கலை, போன்ற பிரதான நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ம.வி.முவின் தொழிற்சங்கப் பிரிவு பொருளாளர் கிருஸ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் இழுபறியில் இருக்கும் கூட்டு ஒப்பந்தம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியே, மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, மக்கள் மகஜர் ஒன்றை தயாரித்து சேகரிக்கப்படும் கையெழுத்துக்களையும் இணைத்து, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தொழிற்துறை அமைச்சர், பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]