மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03
SUNDAY MARCH 13, 2016

Print

 
இளம் வயதிலேயே முகச் சுருக்கமா? கவலையை விடுங்க

இளம் வயதிலேயே முகச் சுருக்கமா? கவலையை விடுங்க

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறுவயதிலேயே சிலருக்கு தோல்சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. இதற்கு காரணம் கோபப்படுவது தான்.

கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய முகச்சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன.

முகச்சுருக்கத்தை நீக்க சில டிப்ஸ்

சந்தனப் பவுடரில் கிளிசரின், பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.

பாலுடன் ஓட்ஸ் மாவு மற்றும் சந்தனப் பவுடர் கலந்து முகத்தில் பூச சுருக்கம் மறையும். முட்டையின் வெள்ளை கருவோடு தேனைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறைந்து முகமானது பிரகாசமாய் இருக்கும்.

பப்பாளிப் பழத்தை நன்கு அரைத்து, அதில் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், முகம் சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும். எலுமிச்சை தோலை அரைத்து அத்துடன் உருளைக்கிழங்கு, எலுமிச்சைச் சாறு, சிவப்பு சந்தனம் ஆகியவற்றை சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து, மெல்லிய மஸ்லின் துணியால் முகத்தை மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணிநேரம் கழித்துக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]