மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03
SUNDAY MARCH 13, 2016

Print

 
பாமரனின் பகிரங்க பக்கம்

அந்த இரகசியம் இதுதான்

தலைநகரில் நடைபெற்ற ஒரு பாராட்டு விழாவில், ஒரு பெண் பிரமுகர்,

ஏற்பாட்டாளரான பிரமுகரினால்

அவமரியாதைக்குட்படத்தப்பட்ட சம்பவம்

ஒன்றைப் பற்றிக் கடந்த வாரம் தெரிவித்துவிட்டு,

ஏன் அந்தப் பெண் பிரமுகர் அவ்வாறு நடத்தப்பட்டார்,

என்பதை இவ்வாரம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா.

இந்த ஒரு வாரத்திற்குள் பாமரனுக்கு

ஆயிரத்தெட்டு தொலைபேசி அழைப்புக்கள்.

அதிலொன்று பாதிக்கப்பட்ட அப்பெண் பிரமுகரின் வலது கை.

பாமரனுக்கு அம்மா பாராட்டியதாக கூறச் சொன்னாவாம்.

அப்படியே உண்மை இதுதான் எனவும் விளக்கச் சொன்னாவாம்

இததான் அந்த உண்மை,

இந்த பிரமுகர், பெண் பிரமுகரிடம் ஒருதொகை பணம் கேட்டிருக்கிறார்.

அந்தத் தொகை தர முடியாது. நான் இன்னும் பலருக்கு

உதவி செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் அதில் அரைவாசி தருகிறேன்'

என்று பெண் பிரமுகர் சொல்லியிருக்கிறார்.

'இல்லை அந்தத் தொகைதான் வேண்டும்!

என்று அன்புடன் கட்டளையிட்டிருக்கிறார் விழா ஏற்பாட்டளரான பிரமுகர்.

பெண் பிரமுகர் சற்று இறுக்கமாக முடியாது என்று சொல்லவே,

இறுதியில்,

சரி பணம் ஒன்றும் வேண்டாம் நீங்கள் நிகழ்ச்சிக்கு வாருங்கள்

என்று சொல்லிவிட்டு நமது பிரமுகர் போய் விட்டாராம். இது தான் நடந்த கதை.

அந்த பெண் பிரமுகரை நமது பிரமுகர் விழாவில் வைத்துக் கணக்கெடுக்காமல் நடந்து கொண்டதற்குக் காரணம் இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இதிலிருந்து ஒரு சந்தேகம் எழுகிறது.

அது என்ன?

கௌரவிக்கப்பட்ட மற்ற பிரமுகர்கள் எல்லோருமே பணம் கொடுத்துதான் அந்த கௌரவத்தைப் பெற்றுக் கொண்டார்களா? சீச்சீ.....

அப்படி இருக்காது என மனம் சொல்கிறது.

பொதுவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு சில பிரமுகர்கள் நிகழ்ச்சியை நடத்துகிறவருக்கு பணம் கொடுப்பது சகஜமான விடயம் தான். கலைஞர்களுக்கு கொடைவள்ளல்கள்தான் உதவி செய்வது என்பது எல்லோருக்கமே தெரியும்.

அப்படி இல்லாமல்,

'எங்களுக்கு இவ்வளவு பணம் தான் வேண்டும்!

என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

விடயத்தை கேள்விப்பட்ட சில பிரமுகர்களும் கேட்கும் கேள்வி இதுதான்.

ஏதோ பலரது மனதிலிருந்த சஸ்பென்ஸைப் போட்டுடைத்ததில்

நிம்மதியாக இருக்கிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]