புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 

டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டினால் முன்னெடுக்கப்பட்டிருந்த டயர் ஆலோசனைச் சேவை

டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டினால் முன்னெடுக்கப்பட்டிருந்த டயர் ஆலோசனைச் சேவை

வாகன உரிமையாளர்களுக்கு அடிக்கடி தமது வாகன டயர்களை பரிசோதித்து பராமரித்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆலோசனை செயற்திட்டத்தை தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக வெற்றிகரமாக டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டத்துக்கு “Hankook Perfect Drive” என பெயரிடப்பட்டிருந்தது. இந்த செயற்திட்டம் ரேஸ் கோர்ஸ் சர்வதேச ரக்பி மைதானத்தின் - வாகன தரிப்பிட வளாகத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் Hankook தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்று, வாகன உரிமையாளர்களுக்கு டயர்களின் அழுத்தம், வயது, தவாளிப்புகளின் நிலை, ஆழம் மற்றும் வெளிப்புற சேதங்கள் மற்றும் கால நேரத்தில் சுழல வேண்டியதன் முக்கியத்துவம், முறையான எலைன்மன்ட் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு பங்குபற்றுநருக்கும் பிரத்தியேகமான டயர் பராமரிப்பு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததுடன், தமது வாகனத்துக்கு பொருத்தமான டயரை எவ்வாறு தெரிவு செய்து கொள்வது பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டிருந்தது. பங்குபற்றிய அனைவருக்கும் இலவச அன்பளிப்பும், 10சதவீத விலைக்கழிவு வவுச்சர்களும் வழங்கப்பட்டிருந்தன.

வாகன பராமரிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் நிறுவனமாக டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் திகழ்கிறது. 1988 ஆம் ஆண்டு முதல் இலங்கையில்ல வாகன உதிரிப்பாகங்களை விநியோகிப்பதில் முன்னோடியாக DSL நிறுவனம் திகழ்வதுடன், உலகப் புகழ்பெற்ற பல டயர் நாமங்களை இலங்கையில் விநியோகிப்பதில் ஏக விநியோகஸ்த்தராக திகழ்கிறது. இலங்கையில் முதல் தர கொரிய டயர் நாமமான Hankook டயரை DSL அறிமுகம் செய்துள்ளது. துறையில் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலதிகமான துறைசார் நிபுணத்துவத்தை DSL கொண்டுள்ளது. பரிபூரண டயர் தெரிவுகளுக்கு மேலதிகமாக, விற்பனையில் பெருமளவு அதிகரிப்பை பதிவு செய்து வருவதுடன், நாடு முழுவதும் உறுதியான விநியோகஸ்த்தர் வலையமைப்பையும் கொண்டுள்ளது.

தென் கொரியாவின், சியொல் நகரை தளமாகக் கொண்டியங்கும் Hankook டயர் குரூப், உலகின் ஏழாவது மிகப் பெரிய டயர் உற்பத்தி நிறுவனமாகும். உயர் தர கொரிய வாகனங்களான KIA Sorento, KIA Sportage, Hyundai Santa Fe, Ssangyong, Rexton மற்றும் உலகப் புகழ்பெற்ற வாகனங்களான Mercedes மற்றும் Ford போன்றவற்றிலும் Hankook டயர்கள் உற்பத்தியின் போது பொருத்தப்படுகின்றன. எனவே, இலங்கையில் தற்காலத்தில் பெருமளவு கொரிய நாட்டின் வாகனங்கள் பாவனையிலுள்ள நிலையில் Hankook டயர்களுக்கு அதிகளவு கேள்வி காணப்படுகின்றது. உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் காரணமாக உலகளாவிய ரீதியில் இந்த டயர்களுக்கான மதிப்பு அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் காணப்படும் புகழ் பெற்ற டயர் உற்பத்தியாளர்களுக்கு அசல் உதிரிப்பாகனமாக டயர்களை இந்நிறுவனம் விநியோகித்த வண்ணமுள்ளது. Hankook வருடாந்தம் 92 மில்லியன் டயர்களை உற்பத்தி செய்த வண்ணமுள்ளது. மேலும், அலோய் வீல்கள் மற்றும் பிரேக் பாட் வகைகளையும் விற்பனை செய்த வண்ணமுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.