மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு: பாதுகாப்பானதும், சமூக பொருளாதார ரீதியில் பயனுள்ளதாகவும் அமைய...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: பாதுகாப்பானதும், சமூக பொருளாதார ரீதியில் பயனுள்ளதாகவும் அமைய...

எஸ்.கே. சந்திரசேகரன்
வெளிக்கள இணைப்பாளர், பிரிடோ.

ஆனால் நீங்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டாம். மாதாமாதம் சம்பளத்தை கட்டாயமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் சம்பளத்தில் தேவையான அளவினை மட்டும் உங்கள் பிள்ளைகளைப் பராமரிக்கின்றவர்களுக்கு அல்லது கணவனுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும்.

நீங்கள் இலங்கையில் வைத்து உங்கள் பெயரில் திறந்துள்ள வங்கிக் கணக்குக்கு எஞ்சிய பகுதியை அனுப்பி வைப்பது மிகவும் உகந்தது. ஒரு வேளை நீங்கள் அனுப்பும் பணத்தை உங்கள் கணவர் அல்லது உறவினர்கள் செலவு செய்து விட் டால் நீங்கள் திரும்பி வரும்போது உங்களுக்கு சேமிப்பாக எந்தப் பணமும் இல்லாத நிலை ஏற்படும். நீங்கள் இருக் கின்ற நாட்டில் இடைக்கிடை பொருட்களை கொள்வனவு செய்து அந்த வீட்டில் சேர்த்து வைப்பது அவ்வளவு பொருத் தமான செயலல்ல.

கணவரையும், பிள்ளைக¨யும் அல்லது பெற்றோரையும் பிரிந்து வீட்டிலிருந்தும் நாட்டிலிருந்தும் தூரமான வெளிநாடு ஒன்றில் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது ஆரம்பக் காலப்பகுதியில் உங்களுக்கு மனதில் ஏக்கமும் தனிமை உணர் வும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாகும். இருப்பினும் அந்த நாட்டுக்கும், சூழலுக் கும், மொழிக்கும் குறிப்பிட்ட வீட்டாருக்கும் பழக்கப் படும் வரை நீங்கள் பொறுமையுடன் செயற்படுவது கட்டாயமாகும். (தொடரும்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]