மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
சில மனிதர்களும் சில நியாயங்களும் -12

சில மனிதர்களும் சில நியாயங்களும் -12

சாரங்கனின் மாமா பெயர் தணிகாசலம். ஆதித் யாவின் மாமா சரவணபவன்.

சரவணபவன் நிரம்பக் குழம்பிப் போயிருந்தார். மதிவதனியை லண்டனுக்குக் கூப்பிட்டவரும் இந்த சரவணபவன்தான். இவருக்கும் மகேந்திரத்துக்கும் ஒத்துப்போகவில்லை. பல விடயங்களில் இருவருக்கும் வாதம்தான் நிகழும். ஆதித்யாவும் இவரில் கோபமாகவே இருந்தாள். ஆரணியின் விடயத்தில் இவர் எடுத்த சிரத்தையைப் பார்த்தபின் தன்னுடைய சில அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாள்.

தேனீரைக் கொண்டுவந்து வைத்துவிட்டு அவருக்கு முன்னாலிருந்த கதிரையில் அமர்ந்தாள். சாரங்கனும் வந்தமர்ந்தான். சிறிதுநேரம் இருவரும் எதுவும் கதைக்கவில்லை. தேனீரைக் குடிப்பதுபோல் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

"அப்பாவுக்கு ஆரணியின் விசயத்தைச் சொன் னாலென்ன மாமா?" என்று ஆதித்யா மௌனத்தைக் குலைத்தாள்.

"இல்லையம்மா அவசரப்படாதை. நீ என்ன நினைக்கிறியோ தெரியாது உன்ரை அப்பா ஒரு முன் கோபக்காரன் விசயத்தை விளங்காமல் அம்மாவுக் குமேலை பாய்வார் அது பெரிய பிரச்சினையாகிவிடும். அத்தோடை ஆரணிக்கும் அந்தப் பொடியனுக்கும் இடையில் என்ன தொடர்பு எண்பதும் எங்களுக்குச் சரியாய்த் தெரியாது. இல்லாத ஒன்றை நாங்களே துவக்கி

விடுற மாதிரி ஆகி விடக்கூடாது. எதுக்கும் கொஞ்சம் பொறுமையாய் இருப்பம்." என்று அவர் கூறியபோது அவருடைய நிதானத்தையும் அணுகுமுறையையும் கண்டு அவள் மனதுக்குள் வியந்தாள்.

சாரங்கனும் அவருடைய விளக்கத்தை ஆமோ தித்தான்.

மூவரும் இனி ஆரணிக்கும் அந்தப் பொடியனுக்கும் இடையிலான தொடர்பை அறிவதற்கான முயற்சியை மேற்கொள்வதென்று தீர்மானித்தனர்.

சரவணபவன் சென்றதும் ஆதித்யா மதிவதனிக்கு எடுத்து விடயத்தை விளக்கி ஆரணியை அவதா னிக்கும்படி கூறிவைத்தாள்.

ஆரணியை அவதானிப்பதென்பது சுலபமான காரி யமல்ல என்று ஆதித்யாவுக்குத் தெரியும்.

ஆரணி ஒரு சாதாரண பெண்ணல்ல. படித்தவள். அறிவாளி. எதையும் சிந்தித்துச் செயலாற்றும் தன்மை கொண்டவள் என்பதும் ஆதித்யாவுக்கும் தெரியும். அவள் வழக்கறிஞர் படிப்பில் கடைசி வருடத்தில் இருக் கிறாள். அவளிடம் உள்ள பலவீனம் உணர்ச்சி வசப்ப டுதல் ஒன்றுதான்.

தாஸைக் காதலிக்கிற அளவுக்கு முடிவு எடுக்கும் முட்டாளுமல்ல அவள். அப்படி அவள் முடிவு எடுத்திருந்தால் தாஸ் நிரம்பக் கெட்ட வனாகவும் இருக்க முடியாது.

ஆதித்யாவின் சிந்தனையோட்டம் அவளைச் சுற்றியதாகவே இருந்தது.

நேரடியாகவே ஆரணியுடன் கதைத் தாலென்ன என்றும் யோசித்தாள்.

அதிலுள்ள பாதகமும் அவளுக்குப் புரிந்தது. அப்படி ஒன்றும் இல்லாமலி ருந்தால் அக்காவென்றும் பாராமல் அக்குவேறு ஆணிவேறாகக் கிழிப் பாள் என்ற பயமும் ஆதித்யாவுக் கிருந்தது.

எதுக்கும் அந்தப்பொடியன் வெளி யில் வரட்டும் என்று தன்னைத் தேற் றிக் கொண்டாள்.

இப்படி இவர்கள் குழம்பிக் கொண் டிருக்க வவுனியாவில் மகேந்திரம் ஒரு சிக்கலுக்குள் அகப்பட்டு தவித்துக் கொண்டிருந்தார்.

அன்று சாமத்தில் அவருடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது. நித்தி ரைத் தூக்கத்தோடு எழுந்து சென்று கதவைத் திறந்தார். இராணுவம் நின்றிருந்தது.

உங்களை விசாரணைக்காக அழைத்துச் செல்லவேண்டியுள்ளது என்றார்கள். இராணுவமாக இருந் தாலும் அவரை மரியாதையாகத்தான் அழைத்தார்கள்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின் இந்தக் கைதுகள் சர்வசாதாரணம்.

மகேந்திரம் அவர்களுடன் சென்று ஜPப்பில் ஏறினார்.

அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் விழித்துக் கொண்டனர்.

மகேந்திரத்தின் அயல் வீட்டுக்hரர் உடனடியாகத் தன் கைத் தொலைபேசியை எடுத்து மகேந்திரத்தின் தம்பி நாகேந்திரத்திற்குப் போன் பண்ணினார்.

அதிகாலைவேளை வந்த தொலைபேசிச் செய்தியால் கதிகலங்கிப்போன நாகேந்திரம்

உடனே ஆதித்யாவுக்கு விடயத்தை அறிவித்தார்.

ஆதித்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மாவுக்குச் சொல்லலாமா விடவா என்ற குழப்பம். சாரங்கன் வேண்டாமென்றான்.

இப்போ என்ன செய்வது?


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]