மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நாளை மறுதினம்

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நாளை மறுதினம்

தொடர்ந்து காணிகளை பிரித்துக் கொடுப்பதில் கவனம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையகத்தில் தோட்ட நிர்வாகமும் கம்பனிகளும் இணைந்து சதிவே லைகளில் ஈடுபட்டுள்ளன. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். காணிகளை பிரித்து தருவதாக கூறி, தொழிலாளர்களிடம் கையொப்பம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சில தோட்டங்கள் முழுமையாக மூடப்பட்டு விட்டன. அப்பகுதியிலுள்ள தோட்ட தொழிலாளர்கள் தற்போது வேலையின்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சம்பள பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து தோட்டங்களில் காணிகளை பிரித்துக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி அதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு கடலில் மிதந்துகொண்டும் வானத்தில் பறந்துகொண்டும் சேவை செய்யும் அமைச்சு தேவையில்லை. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஓர் அமைச்சுப் பதவி கிடைத்தால் போதும், அமைச்சுப் பதவியின்றி கூட என்னால் மலையக மக்களுக்கு சேவை செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]