புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு - 2015 ஜேர்மனியில்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு ஒன்றியம் நடத்தும்

ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு - 2015 ஜேர்மனியில்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10.10.2015 சனிக்கிழமை ஜேர்மன் நகரில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சி மாநாடும் அதனைத் தொடர்ந்து செந்தமிழ்க் கலைமாலை நிகழ்வும் நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் அகிலத் தலைவருமான செந்தமிழ்க் காவலர் வி. எஸ். துரைராஜா இயக்க செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம், மாநாட்டுக் குழுத் தலைவர் ஏ. இராஜசூரியர் மாநாட்டுக் குழுச் செயலாளர் கி. யேம்ஸ் அல்ஸ்ரன் ஆகியோர் ஊடகங்களுக்கு அறியத் தந்துள்ளனர்.

உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைத்து உலகத் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்னும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து

தமிழ்ப் பண்பாட்டாளர் என்னும் ஒரே குடையின் கீழ் செயற்படுவதற்கும் தமிழ் மொழியினை மறந்து போனவர்கள மொழி- உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கையுடனும் 1974 ஜனவரித் திங்கள் எட்டாம் நாள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலகத் தமிழாராட்சி மாநாட்டில் பல அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தினை ஏற்படுத்தினார்கள்.

இவ் இயக்கம் கனடாவைத் தலைமைப் பீடமாகக் கொண்டு இயங்கும் இவ் இயக்கம் பல நாடுகளில் கிளை பரப்பி பதிவு பெற்றுள்ளது. உலகளாவிய மாநாடுகள் மூலம் இவ் இயக்கம் தமிழர்களின் கலை பண்பாடுகளை ஊக்குவிப்பதுடன் தமிழ்மொழிக் கல்வி தமிழர் வரலாறு ஆவண சேமிப்பு தூய தமிழ் வழக்கு.

தமிழ்ச் செம்மொழி உருவாக்கம் உலகத் தமிழர்களிடையே ஒற்றுமை பேணல் முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. இம் மாநாட்டில் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் அமைதியான வாழ்வு மொழி, பண்பாடு, புனர்வாழ்வு, வாழ்வுரிமை போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.