மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
விளம்பரம் ஓர் இஸ்லாமியப் பார்வை

விளம்பரம் ஓர் இஸ்லாமியப் பார்வை

மனித சமூகத்தின் வாழ்வியல் தேவை களை நிறைவேற்றிக் கொள்ள ஆகு மான வழியில் பொருZட்டுவதை இஸ்லாம் அனுமதித்திருக்கின்றது. ஆதலால் ஹலா லான எந்த விதத்திலும் மனிதன் பணம் சம்பாதிக்க முடியும். வருமான வழி தேட முடியும். ஆனால் அங்கே பொய் ஏமாற்று போன்ற எந்தவித மோசமான செயற்பாடும், அநீதியான நிலையும் ஏற்படக் கூடாது என்பதில் இஸ்லாம் மிக்க கவனம் செலுத்தி நிற்கின்றது. அப்படி ஏதும் சேர்ந்து விடின் அப்பணம் அசுத்தமாக மாறிவிடும். அவரும் குற்றச் செயல் புரிந்தவராக அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கவேண்டி வரும்.

அந்த வகையில் இன்று சமூகத்தில் - மக்கள் தமது வியாபாரத்தை, தொழில் நடவடிக்கைகளை, தொழிலிடங்களை மேம்படுத்த வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடிக்க தமது உற்பத்திப் பொருட்கள் மக்களிடையே அதிகமதிகம் விற்பனையாக “விளம்பரப்படுத்தல்” என்ற ஒருமுறைமை பரவலாகக் கையாளப்படுகின்றது.

ஓர் அரபுப் பழமொழியின் அடிப்படை யில் “விளம்பரம் அது வியாபாரத்தின் பாதிப்பங்கு” என்பது விளம்பரம் தடை யான ஒரு விடயமல்ல. அது எப்படி நடைபெறுகின்றது என்பதே கவனிக்க வேண்டியதாகும்.

தன் பொருளை எப்படியாவது விற்று முடிக்க வேண்டும் தம் நிறுவனத்தோடு மக்கள் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக இன்று அப்பட்டமான பொய்கள் பரத்தப்படுகின்றன. போலி வாக்குறுதிகள் மக்கள் மைதானத்தில் தாவப்படுகின்றன. இது இஸ்லாமிய ஷரீஅத்தில் தடுக்கப்பட் டதும் வன்மையான எச்சரிக்கைக்கு உட்பட்டதுமாகும்.

அருமை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஏமாற்றம் செய்வோரை, பொய் கூறி, பூசல் செய்து வியாபார, தொழில் நடவடிக்கை களில் ஈடுபடுபவர்களை பல கட்டங்களில் எச்சரித்துள்ளார்கள். பொதுவான வார்த்தை யாகவே நபியவர்கள் இப்படிக் கூறினார்கள். “ஏமாற்றம் செய்பவன் எம்மைச் சார்ந் தவனல்லன்” (நூல்: முஸ்லிம்) நபியவர்கள் கூறியிருக்கும் இவ்வார்த்தை சாதாரண மானதல்ல கடுமையான தாக்கத்திற்குட் பட்டதல்லவா!!

மேலும் தூதர் (ஸல் அவர்கள் - மூன்று நபர்களோடு அல்லாஹ் நாளை கியாம நாளில் பார்க்கமாட்டார்கள், பேசமாட் டான் அவர்களைப் பரிசுத்தப்படுத்தமாட் டான் என்று கூறியதும் நபித்தோழர்களில் ஒருவரான அபூதர் (ரலி) அவர்கள் அம்மக்கள் நஷ்டமடைந்து விட்டார்களே! யார் அவர்கள்? என வினவ நபியவர்கள் கூறி னார்கள்:

1. கரண்டைக்காலின் கீழ் ஆடை அணிபவன்

2. தான் கொடுத்த உதவி உபகாரத்தை சொல்லிக் காட்டுபவன்

3. தன் பொருளை பொய் சத்தியம் செய்து (பொருத்தமற்ற அதிக விலைக்கு) விற்பவன் (நூல் : முஸ்லிம்)

அதேபோல் அன்பு நபி (ஸல் அவர்கள் மிக இரக்கமாக எச்சரிக்கை விடுக்கின்றார் கள். “வியாபார விடயத்தில் அதிகம் சத்தியம் செய்வதை தான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன். (பொய்) சத்தியம் விற்பனையை ஏற்படுத்தும் பின்னர் அழிவை ஏற்படுத்தி விடும். (நூல்: முஸ்லிம்)

எனவே அன்பார்ந்த வியாபார பெரு மக்களே! வர்த்தகத்தை மேம்படுத்த முனையும் பெருந்தகைகளே! நிறு வனத்தை முன்னேற்ற நினைக்கும் நிருவாகிகளே! சேவை மனப்பாங்குடன் செயற்படும் முகவர்களே!

உங்கள் செயற்பாடுகள் நல்லதாகவும், உண்மையானதாகவும் இஸ்லாம் காட்டும் முறையிலும் அமையுமாறு செயற்படுத் துங்கள். மக்கள் மன்றத்துக்கு செல்லும் உங் கள் வாக்குறுதிகள், விளம்பரங்கள், பிரசுரங்கள் போன்றவற்றில் பொய் கலந்திட வேண்டாம். போலியான, ஏமாற்று வித்தைகள் காட்டி சமூகத்தை சீரழித்திட வேண்டாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]