மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
அமரர் பண்டாரநாயக்க பற்றி முத்தழகு பாடிய தமிழ்ப் பாடல்கள்

அமரர் பண்டாரநாயக்க பற்றி முத்தழகு பாடிய தமிழ்ப் பாடல்கள்

அமரர் பண்டாரநாயக்காவின் 57ஆவது சிரார்த்த தினத்தையொட்டி தேசிய கலை, கலாசார வளர்ச்சிக்கு வித்திட்ட இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா அவர்கள் மீது 1974 ஆம் ஆண்டில் பாடப்பட்ட பாடல்களை மீண்டும் நமது நேயர்கள் இலங்கை வானொலியில் கேட்கின்ற வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாடல்களை இலங்கையின் பிரபல தேசியப் பாடகரும் வானொலி, ரி.வி., தமிழ், சிங்கள திரைப்படப் பின்னணிப் பாடகருமான கலாபூஷணம் வி. முத்தழகு சூரியகுமார் பாடியிருக்கிறார். தேசிய உணர்வூட்டும் அந்த இனிய பாடல்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் ஒலிபரப்புச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் நந்த முறுத்துட்டுவேகமவின் பணிப்பின் பேரில் இலங்கை ஒலிபரப்புக் கட்டுத்தாபன தமிழ்ச் சேவை பணிப்பாளர் ஆர். கணப்பதிப்பிள்ளை ஏற்பாடு செய்துள்ளார்.

இப்பாடல்களை நம் நாட்டு பிரபல கவிஞர்களான ஈ. இரத்தினம், யூ. எஸ். ஹமீத், டாக்டர் எஸ். கணேசன் ஆகியோர் இயற்றியுள்ளார்கள். வானொலி, சினிமா, ரி.வி. புகழ் கலாபூஷணம் எம். எஸ். செல்வராஜா இசையமைத்துள்ளார். இப்பாடல்கள் வானொலியில் நேற்று 26ம் திகதி முதல் மூன்று தினங்கள் விடியும் வேளை நிகழ்ச்சிகளில் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையுள்ள மற்றும் நேரங்களில் இடைக்கிடையே ஒலிபரப்ப ஏற்பாடாகியுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]