புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
தொட்ட பணியை தொடர அனுமதியுங்கள்

தொட்ட பணியை தொடர அனுமதியுங்கள்

“இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியின் கண்ணியம், மனிதநேயம், உண்மை, நீதி, கொள்கை என்பன சமூக அபிவிருத்திக்காக பங்களிப்பு செய்யப்படவுள்ளது. மக்களுக்காக தொடரப்பட்ட சமூக சேவை நிறுவனங்களினூடான பணி தொட்ட பணியாக இருந்தாலும் தொடரப் போகும் பணியானது இம் மாவட்ட மக்களின் சுபீட்சத்துக்காக அன்றி தனிமனிதருக்கல்ல.”

மூதூர் அரபிக் கல்லூரிக்கு அருகாமையில் நடைபெற்ற ஐ. தே. கட்சியின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திருமலை மாவட்ட ஐ. தே. கட்சி வேட்பாளர் டாக்டர் கே. எம். ஸாகீர் பேசுகையில் கூறினார்.

எம். எம். அப்பாஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து கூறியதாவது, இந் நாட்டில் மக்கள் தான் நாயகர்கள். புல்மோட்டை, கிண்ணியா. கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தோப்பூர், திருமலை பிரதேச மக்களின் விவசாயம், மீன்பிடி, கால்நடை, வாழ்வாதாரம், தொழில் பாதிப்புக்களென மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகள் எழுந்தமானவை அல்ல. அடிப்படையானவையாகும்.

இதற்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அவசியமாகும். மூதூர் பிரதேசமும் பல துயரமான பாதிப்புக்களை சந்தித்த பிரதேசம் இதற்கெல்லாம் மக்களின் குரலாக ஒலிக்கச் செய்து அவலங்கள் அகன்று ஆட்சியின் 5 ஆண்டு திட்டத்திலும் மக்களின் குரலாக ஒழிக்கச் செய்து பாராளுமன்றத்தின் குரலாக அங்கீகாரம் பெறுவதற்கும் நிறைவேற்றுவதற்கும் மக்கள் பலம் வலிமையானது என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.