புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
சொன்னதும்....... சொல்லாததும்!

அரசியல் களத்தில்........

சொன்னதும்....... சொல்லாததும்!

! மஹிந்தவை தோற்கடித்ததன் தவறை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்
- அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க
? உங்களை வெற்றி பெறச் செய்ததின் தவறையும் மக்கள் எப்போதோ உணர்ந்து விட்டார்கள்.

! பெருந்தோட்ட மக்கள் வாழ்வில் அறுபது மாதங்களில் சுபீட்சம்.

- இ.தொ.கா. தேர்தல் விஞ்ஞாபனம் கூறுகிறது

? அப்பாடா....! இவ்வளவு காலமும் மலையக மக்கள் வாழ்வில் சுபீட்சம் இல்லேங்கிறதை இப்பவாவது ஒத்துக்கிaர்களே. சந்தோசம்.

! ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே எமது எதிர்கால இலக்காகும்.

- வேட்பாளர் அன்வர் முஸ்தபா

? சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுக்காதீங்க ஊழல் என்கிற வார்த்தையை கொஞ்சம் அமுக்கி வாசிங்க.

! பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் கஜேந்திரகுமார் செய்தது என்ன?

- சுமந்திரன் கேள்வி

? தூங்கிறவரை எழுப்பாட்டுங்க சுமந்திரன் சார். தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்புaங்களே. நடக்கிற காரியமா?

! கொழும்பில் தமிழ் வேட்பாளர்களின் வாக்குகளை சிதறடிக்காதீர்கள்.

- மிதிலா சிறிபத்மநாதன்

? சபாஷ்! சரியாச் சொன்னீங்க, உதிரிக் கட்சிகள், உருப்படியில்லா சுயேச்சைக் குழுக்களுக்கு வாக்குகளைப் போட்டா. மனோ கணேசனைப் போல உள்ளவங்க பாராளு மன்றத்துக்கு போக முடியாதே.

! இத்தனை தகுதி உள்ள இவரையும் - இவரது அணியையும் பலப்படுத்துவோம். அறிவு ஆற்றல் அனுபவம் ஆளுமை...... நேயம், பிரபல்யம், நுணுக்கம், சாணக்கியம்...

- தேர்தல் விளம்பரத்தில் ரவூப் ஹக்கீம்

? எல்லாத்தையும் சொல்லி இருக்கீங்க. சொல்ல வேண்டிய சிலதை சொல்லாம விட்டுட்டீங்களே?

! திருட்டுக் கூட்டத்திற்கு வாக்களிப்பதா? தூய்மையான ஆட்சிக்கு வாக்களிப்பதா? மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

- பசறையில் பிரதமர் ரணில்

? இந்தக் கேள்விய பசறையில் மட்டும் கேட்டா போதாது - மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல் என்று ஒவ்வொரு மாவட்டமா கேட்டத்தான மக்களுக்கு ஞானம் பொறக்கும்.

! மஹிந்தவுடனா? மைத்திரியுடனா? என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பகிரங்கமாகக் கூற வேண்டும்.

- வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க

? எந்தக் கட்சி ஆட்சிக்கு வருதோ.... அந்தக் கட்சியோட இருக்கணுமங்கிறதுதான் தம்பி ஆறுமுகத்தின் தாத்தாவோட தாரக மந்திரம். கவலைப்படாதீங்க சார். நாளைக்கு நிச்சயம் உங்க பக்கம் தான்!

! வடமாகாண முதலமைச்சர் இம்முறை தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

- பத்திரிகைச் செய்தி

? ஆடர்... ஆடர்... அமைதி! அமைதி! வந்தவழி மறக்கிற மனுஷரில்ல நம்ம நீதியரசா

! அறுபது மாதத்தில் புதிய நாடென்பது, வடகிழக்கு இணைத்த தமிbழமே!

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

? அப்போ புலிகள் இயக்கத்தை பூண்டோட அழிச்சிட்டேன்னு நீங்க மார்தட்டுனது எல்லாம் வெறும் புரூடாவா?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.