மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 02 2015

Print

 
இலங்கை

இலங்கை

அணியிளங்கதிர் ஆயிரமுள்ள அருக்கன் பொய்கும் குடபாலிடை மேவ மணிக்கொணர்ந்து மணி விளக்கேற்றிடும் மகாவலி கங்கை நாடெங்கள் நாடே என “தங்க தாத்தா” பாடினார். நாடெங்கள் நாடே என புகழ் பெறப்பட்ட நாடு எமது நாடாகிய இலங்கை தான் இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் தீவாகும்.

வானத்தை முட்டும் மலைகள். அதன் உச்சியிலிருந்து ஊற்றெழுந்து சலசலவென்ற ஒலியுடன் பாயும் ஆறுகள். ஆற்று பாய்ச்சலினாலும் குறைவற்ற மழையினாலும் தென்னத்தோப்புகள் என்ன? பச்சை பசேலென ஆகாயத்தை முட்டும் கழுகு மரங்கள், குளங்கள் அவற்றின் அருகிலுள்ள பகுதிகளில் கதிர்களோடு கூடிய நெல் வயல்கள். மலைகளின் மேல் குளிருக்கு போர்வை போர்த்திருப்பது போன்ற தேயிலைகளும், இறப்பர்களும் இந்நாட்டின் அழகு மெழுகூட்டுகிறது.

எமது மரகதத்தீவினை ஆகாயத்தில் இருந்து பார்த்தால் எல்லாமே பச்சைதான். நமது நாட்டை தன் தாயை நேசிப்பது போல நாம் எமது நாட்டை நேசிக்க வேண்டும். எமது நாட்டின் பெருமையை கூறுவது போலவே எமது நாட்டின் இயற்கை வளங்கள் உள்ளன. அதனால் வெளிநாட்டவர் எமது நாட்டை புகழ்கின்றனர்.

ஆர். எப். ரீமா,

தரம் - 7ரி,

ப/ வெளிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம்,

வெளிமடை.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

சின்னச்சாமி ஜயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு 1882 டிசம்பர் 11 தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டாய புரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்ரமணியன். 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால் பாரதியார் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

தனது 11ம் வயதில் பள்ளியில் படித்து வரும் பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897ம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898ம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையை அடைந்தார். அதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக் கொண்டார். பின்னர் எட்டயபுர அரண்மனையில் பணி கிடைத்தது.

சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்கும் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு இருந்தார். பின்னர் எட்டயபுர மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பின்னர், 1904ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் விவேத பானு இதழில் வெளியானது வாழ்நாள் முழுவதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் தமிழாசிரியாகவும் பணியாற்றியுள்ளார்.

1921ம் ஆண்டு ஜுலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய் வாய்ப்பட்டார். பின்னர் 1921ல் செப்டம்பர் 12 அதிகாலை 01.30 மணிக்கு மரணமடைந்தார்.

இவர் பாப்பா பாட்டு, குயில் பாட்டு, கண்ணன் பாட்டு போன்ற பல பாட்டுக்களை இயற்றியுள்ளார். இவரது அரசியல் இயக்கம் இந்திய விடுதலை இயக்கமாகும்.

இவரது வாழ்க்கை துணையாக செல்லம்மாள் இணைந்து கொண்டார். பாரதியார் ஒரு இந்து சமயத்தவர் ஆவார்.

இவர் கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர் போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டார்.

எம். எம். எல். பாத்திமா மினா,

தரம் - 07தி,

கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை.

நம் நாட்டில் புழக்கத்திலிருந்த நாணயங்கள்

மஸ்ஸா எனும் பெயரில் சிங்கள அரசர்கள் கால த்தில் புழக்கத்தி லிருந்த சேது நாணயங்கள் யாழ் குடாவை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்திகளால் 1462 முதல் 1597 வரை வெளியிடப்பட்டது.

நல்லூர், திருநெல்வேலி, கோப்பாய், சண்டிலிப்பாய், புத்தூர், நாகர் கோயில், நவன்தனை, மாந்தை மாங்குளம் மற்றும் யாழ். குடா நாட்டின் பல பகுதிகளிலும் பாணந்துறையிலும் சேது நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சேது நாணயத்தொகுதிகளை நாணயவியலாளர் கொட்றிங்டன் இருவகையாக வேறுபடுத்தி விளக்கியுள்ளார். சுமார் இரண்டு நூற்றாண்டுகள் இந்நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.

இப்படத்தில் முன்பக்கத்தில் காளையும் சேது தமிழ் வரிவடிவத்தையும் மறுபுறம் அரசன் பாரம்பரிய முறையில் நின்று கொண்டிருப்பதையும் குறித்து நிற்கும் சேது செம்பு மஸ்ஸா நாணயமாகும். இதன் நிறை 4.4 கிராம் 1.9 செ.மீ விட்டமுடையது.
 

கே. ஏ. அலீம், கம்பளை

 

ஏரிகளில் சங்கமமாகும் நதிகள்

ஏ. எம். ஸைமி ஸதா,

எம். எச். எம். ஐஸ்வாடி வீதி,

வாழைச்சேனை - 04.

 

கொழும்பு கிராண்ட்பாஸ் முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் சிறுவர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் சுகததாஸ மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியான நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவின் பாரியார் திருமதி ராஜபக்ஷவை மாணவியொருவர் வரவேற்றபோது பிடிக்கப்பட்ட படம்.



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]