விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03
SUNDAY JANUARY 05 2014

Print

 
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம்:

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம்:

சிவில் சமூகத்தின் நடுநிலையான ஆரோக்கியமான முன்னெடுப்பு

ஜனாதிபதியின் அனுமதியின்றி தரமுயர்த்தல் கிடையாது

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துகின்ற விவகாரம் தற்போது அரசியல் தரப்பினரின் விவாத மேடையாக மாறியிருக்கின்றது. இருப்பினும் இவ்விடயத்தினை முனைப்போடு முன்னெடுக்கின்ற கல்முனை சிவில் சமூகத்தினர் அரசியல் அணுகுமுறைகளுக்கு அப்பால் தரமுயர்த்தலின் நியாயபூர்வத்தை எடுத்தியம்பியும், பிரதேச செயலகமொன்றின் நிர்வாக கட்டமைப்பின் அவசியத்தினை புரிந்து கொண்டும் சில நடுநிலையான புத்திஜீவிகள் மதகுருமார்கள், அரசியல்வாதிகளின் உதவியுடன் அரசின் சம்மந்தப்பட்ட அமைச்சர்களை அணுகியிருக்கின்றனர். இவ்வாறு சிவில் சமூகத்தின் சார்பாக அதன் தலைவர் பொன். செல்வநாயகரும் செயலாளர் ஏ. ஜே. றமேஸ¤ம் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றிகரமான நகர்வுகளின் பின்னணிதான் தற்போதைய விவாதங்களின் அத்திவாரம், தங்களது அரசியல் இருப்புக்களை காத்துக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலதரப்பட்டோர் வெளியிடுகின்ற அறிக்கைளும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரநிதிகளின் எதிர்ப்புக் கருத்துக்களும் இவற்றில் உள்ளடக்கம்.

1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி இரண்டாக பிரிக்கப்பட்ட கல்முனையின் நிர்வாகம் இன்றுவரை காணி, நிதி அதிகாரமளிக்கப்படாத உப பிரதேச செயலகமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற பெயரில் இயங்கி வருகின்றமை அனைவரும் அறிந்ததே கடந்த காலங்களில் இதனை தரமுயர்த்துவதற்கான முயற்சிகள் பலதரப்பட்ட தரப்புக்களால் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்டபோதும் அவை கைகூடவில்லை.

அன்று முதல் இன்றுவரை இங்குள்ள சமூகத்தை அரசுக்கு எதிரானவர்களாகவும், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாகவும் சித்தரித்து அவர்களது நகர்வுகளை நிறுத்தி ஒடுக்கி வந்துள்ளமை வரலாறு. கல்முனையின் நீண்டகால வரலாற்றையும், எதிர்காலத்தில் கல்முனை வாழ் தமிழர்களது அரசியல் இருப்பு அபிவிருத்தி என்பவற்றை ஆராய்ந்து அதற்கேற்ற விதத்திலேயே கல்முனை சிவில் சமூகத்தினால் பிரதேச செயலக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட வடிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை கல்முனை சிவில் சமூகம் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தற்போது வந்திருப்பதும் கூட கடந்த 25 வருடகாலத்தில் கல்முனை தமிழ் சமூகம் இப்பிரதேச செயலகம் தொடர்பில் சந்தித்த கசப்பான அனுபவங்களே ஆகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் கூட இப்பிரச்சினையை தாம் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய மாவட்டங்களில் காணப்படுகின்ற முஸ்லிம்களுடனான எல்லை மற்றும் காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தி அம்பாறை மாவட்ட தமிழர்களை தாரைவார்த்து விட்டு தமது நோக்கங்களை நிறைவேற்றவே முயற்சிக்கின்றனர் என்பது அவர்களது அறிக்கைகள் ஊடாகவும், செயற்பாடுகள் ஊடாகவும் நன்கு அறியக்கூடியதாக உள்ளது. அம்பாறை மாவட்டத்தை தாரை வார்த்து விட்டு ஏனைய மாவட்டங்களில் தமது அரசியல் நலன்களை உறுதிப் படுத்திக் கொள்வதே தமது வியூகமாகுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெளி மாவட்ட அரசியல் வாதிகளின் கருத்தாக இருக் கின்றது.

இத்தரமுயர்வு விட யத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக் கிடையேயும், வெளிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப் பின் உறுப்பினர்களுக் கிடையேயும் கருத்து முரண்பாடுகள் வலுவடைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்பில் வெளிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரசுடன் ஆரோக்கியமற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்களாயின் அம் பாறை மாவட்ட உறுப்பினர் கள் கட்சியினை விட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருவதாக அறிய முடிகின்றது.

தமிழ் தேசிய கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராஜா, பா.அரியநேந்திரன் போன்றோரின் அறிக்கைகளும் செயற்பாடுகளும் அம்பாறை மாவட்ட தமிழ் சமூகத்தினை ஆத்திரமடையச் செய்துள்ளது. பொன் செல்வராஜா அவர்கள் பெரியநீலா வணையின் ஒரு பகுதியை தனது வாக்கு வங்கியை நோக்காக கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்க முயற்சிக்கின்றார். அரியநேந்திரன் மட்டக்களப்பிலுள்ள முஸ்லிம்க ளுடனான சில காணிப் பிரச்சினைகளை தீர்க்க அம்பாறை மாவட்டத்தில் சில விட்டுக்கொ டுப்புகளை செய்ய வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.

இவற்றுக்கப்பால் மாவை சேனாதிராஜா எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடாமல் மதில் மேல் பூனை போன்றுள்ளார். உண்மையிலேயே அம்பாறை மாவட்ட தமிழ் சமூகம் தொடர்பான அக்கறை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இருந்திருக்குமானால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அழைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து கட்சிகளும் கையெழுத்திட்டு பகிரங்கமாக தமது நிலைப்பாட்டினை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை. இது ஒன்றே போதும் அம்பாறை மாவட்ட தமிழ் சமூகம் தொடர்பில் இவர்களுக்குள்ள அக்கறையினை வெளிக்காட்டுவதற்கு.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் அவர்களிடம் சில நியாயமற்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றது. எல்லை நிர்ணயத்தின் போது கல்முனை நகரில் அதிகளவு வர்த்தக நிலையங்கள் தமக்கு சொந்தமானதாகையால் அவை தமது பிரிவுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கேட்பது எவ்விதத்திலும் நியாயமில்லை.

கடந்த 30 வருடகாலங்களில் இரு இனங்களுக்குமிடையே இப் பிரதேசத்தில் ஏற்பட்ட கசப்புணர்வுகளையும், தமிழர்கள் யுத்தசூழலால் இழந்தவற்றில் ஒரு பகுதியாவது திருப்பி வழங்குகின்றோம் என்ற நல்லெண்ண சமிக்ஞையின் மூலம் இரு இனங்களுக்கிடையேயும் உறவை வலுப்படுத்திக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாகவும் இன்றை சூழலை முஸ்லிம் சமூகம் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரால் முன்மொழியப்பட்ட வடக்கு பிரதேச செயலகம் 73% தமிழர்களையும் 26% முஸ்லிம்களையும் 1% சிங்களவர்களையும் கொண்டதாகவும் அமைப்பது தொடர்பாக இருந்தது. இதனடிப் படையில் பார்க்கும் போது இதனை தனித்தமிழ் பிரதேச செயலகம் என்று சொல்வதற்கு இடமே யில்லை. இதனை கல்முனை சிவில் சமூக பிரதிநிதிகள் முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன், மூவின மக்களும் ஒருங்கே வாழுகின்ற பிரதேச செயலகமாக அமையப் பெறுவதனையும் வரவேற்றிருந்தனர். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் அமைச்சரின் முன்மொழிவை நிராகரித்திருந்தனர்.

வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு கல்முனை வாழ் மூவின சமூகத்திடம் கையளிக் கப்படும் வேளையில் அதற்கு பிரதியுபகாரமாக தனக்கே உரித்தான சுயாதீனமான கட்டமைப் பொன்றின் மூலம் அரசுக்கு ஆதரவான மக்கள் அரசியல் கலாசார மாற்றமொன்றினை ஏற்படுத்து வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை கல்முனை சிவில் சமூகம் பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]