விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03
SUNDAY JANUARY 05 2014

Print

 
அம்மாவாகும் மலாபால்

அம்மாவாகும் மலாபால்

இரண்டு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளாராம் அமலாபால். தமிழ் சினிமாவி ல்தான் கதாநாயகிகள் குழந்தைக்கு அம்மா வாக நடிக்க தயங்குகிறார்கள். ஆனால், மலையாள சினிமாவில் அப்படியல்ல. எத் தனை வயது குழந்தைகளுக்கும் தாயாக நடிக்கிறார்கள். அந்த வகையில், தமிழில் யு+த்புல் கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் அமலாபால், தாய்மொழியான மலையா ளத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாக நடித்திருக்கி றார். அப்படமும் வெற்றி பெற்றிருப்பதால், அதேபோன்று மெச்சு+ரிட்டியான வேடங்கள் நிறைய அமலாபாலை முற்றுகை யிட்டுக்கொண்டிருக்கிறதாம். அதனால், தமிழிலும் பிசியாக இருக்கும் அமலாபால், அடுத்தடுத்து மாறுபட்ட கதாநாயகி வேடங்களாக மலையாளத்தில் ஓ.கே செய்து கொண்டிருக் கிறாராம். மேலும் இதற்கு முன்பு நரைமுடி கதாநாயகர்களுடன் நடிக்க தயங்கி நின்ற அமலாபால், இப்போது மம்மூட்டி, மோகன்லால் போன்ற ஹீரோக்களுடனான வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு வருகிறாராம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]