புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
உலகளாவிய இந்தியர்களின் நலன்கள், ஆக்கபூர்வமான கருத்துக்களே இன்றைய தேவை

உலகளாவிய இந்தியர்களின் நலன்கள், ஆக்கபூர்வமான கருத்துக்களே இன்றைய தேவை

2014 ஜனவரி மாதம் 7-9 திகதிகளில் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் நகரில் 11வது இந்தியர் தின விழா பிரவாசி பாரதிய திவாஸ் நடைபெறவுள்ளது. மகாத்மா காந்தி அடிகள் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியாவை வந்தடைந்த தினமான ஜனவரி 9ம் திகதியன்று இவ்விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு இந்தியர் விவகார அமைச்சர் ஸ்ரீ வயலார்ரவியும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்ரீ ஜpதேந்திர சிங்கும்; இணைந்து இவ்விழாவை ஒழுங்கு செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் இந்திய மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரை யாடவும் இடைத்தொடர்புகளை மேற்கொள்ள வும் இத்தகைய மாநாடு உதவி வருகின்றன. இந்திய மத்திய அரசானது நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக் காட்டவும் உதவும் என வெளிநாட்டு இந்தியர் விவகார அமைச்சர் வயலார் ரவி தெரிவித்திருக்கின்றார்.

உலகெங்கும் வாழ்கின்ற பல்வேறு வகைப் பட்ட, பல்வேறு மொழி பேசும் இந்திய சமூகத்தினர் புதுடில்லி மாநாட்டில் பங்குபற்று வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. வெளி நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் என்பன பற்றிக் கலந்துரையாடுவதற்கான ஒரு களத்தையும் இம் மாநாடு அமைத்துக் கொடுக்கின்றது. இம் மாநாட்டுக்கான முன் னோடி மாநாடு நவம்பர் 2013 அவுஸ்திரேலியா சிட்னி நகரில் நடைபெறறது.

வெளிநாட்டு இந்திய இளைஞர்களின் அபிலாi'கள், பொதுவான மரபுரிமையை பகிர்ந்து கொள்ளுதல், இந்தியாவின் அபிவிருத்தி, இந்தியா ஒரு மென்மையான வல் லரசு, புத்தாக்கமும் தொழில்நுட்பமும், இந்தி யாவின் மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்பு கள், வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறையில் இந்தியா ஒரு கேந்திரமாகும் ஆகிய தலைப்புகளில் இம்மா நாடு விரிவாக ஆராயப்படவுள்ளது.

'புலம்பெயர்ந்த இந்தியர்களை தொடர்பு படுத்துதல், பல்வேறு தலைமுறையினருக்கான இடைவெளி என்ற தொனிபொருளில் நடைபெறும். இம்மாநாட்டைப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அங்குரார்ப்பணம் செய்து வைப்பார்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளில் போது (09.01.2014) மாலை நேர நிகழ்ச்சிகளில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜp கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குவதோடு 2014ம் ஆண்டிற்கான பிரவாசி பாரதீய சம்மான் விருதுகள் வழங்கி கௌரவிக்கின்றார். இம் மகாநாட்டில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் 'பிரவாசி பாரதிய சம்மான்" விருதுகள் ஒரு முக்கிய அம்சமாகும். இந்திய ஜனாதிபதி விருதுகளை 2003ம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருகின்றார். 2013ம் ஆண்டு வரை 151 வெளிநாட்டு வாழ் இந்திய பிரமுகர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை களில் சிறப்பான பணியாற்றி வரும் வெளி நாட்டு இந்தியர்களுக்கு அல்லது அமைப் புகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன

முன்னெப்போதும் இல்லாதவாறு இந்திய மத்திய அரசின் கவனம் தற்போது வெளி நாடுகளில் சிறப்புப்பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் மீது திரும்பியுள்ளமை குறிப் பிடத்தக்கது. இவ்வகையில் இலங்கையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரான மனோ செல்வநாதனுக்கு இந்த உயர் விருது 2011ம் ஆண்டில் புதுடில்லியில் வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டுக்கான விருதுக்கு இருவரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் நிச்சயமாக திரு.பி.பி.தேவராஜ{க்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மாநாட்டில் இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மான் குர்'pட், வெளிநாட்டு வாழ் இந்திய விவகார அமைச்சர் வயலார் ரவி ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொள ;வர். 2500 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ள உள்ள இம் மகாநாட்டில் இலங்கை கோபியோ தலைவரும் தொழிலதிபருமான உதேசி உட்பட பலர்; கலந்து கொள்ள உள்ளனர்.

பிரவசிய பாரதிய திவாஸ் மாநாட்டில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி கல்வி மான்கள் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி பிரமுகர்களுக்கு பிரவாசி சமான் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். மேல்மாகாண களுத்துறை மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவ வேண்டும். தற்பொழுது இந்திய விசா கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இலங்கையிலி ருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இலவச விசா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல கோரிக்கைகளை இலங்கையிலுள்ள இந்திய துணைத்தூதுவர் திரு. பி.குமரன் அவர்களிடம் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அரசும் பெரியளவு ஆதரவை வழங்கி அவர்களின் நல உரிமைகளை கருத்திற் கொண்டு வெளிநாடு வாழ் இந்தி யர்களின் விவகாரங்கள் அமைச்சினை ஏற்ப டுத்தி வயலார் ரவி அவர்கள் அமைச்சராக நியமித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் 27 மில்லியன் இந்திய வம்சாவளி மக்களின் நல உரிமைகளையும் அபிலா i'களையும் மேம்படுத்துவதை நோக்க மாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்.

ஒரு புறம் வெளிநாட்டு இந்தி யர்கள் தமது தாய் நாட்டு தொடர் புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்திய அரசும் அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றது. வெளிநாட்டு வாழு; இந்தியர்களின் மாநாடுகளில் மறைந்த தலைவர் பெ. சந்திரசேகரன் கலந்து கொண்டு ஆற்றிய பணிகளை என் றுமே நினைவு கூறுகின்றார்.

கொழும்பு இந்திய தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் சின்ஹா இந்தியாவினதும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களினதும் நலன் தொடர்பில் அக்கறை காட்டி வருகின்றார். பலதரப்பட்ட இந்திய வம்சாவளி மக்களுடன் இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் தலைவர்களு டனும் தொடர்புகளை ஏற்படுத்தி இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகள் பற்றியும் சிறந்த புரிந்துணர்வை பெற்றுள்ளார்.

இலங்கையுடனான தொடர்பு களை வலுப்படுத்தி வருகின்ற அதேவேளை மலையக மக்களின் கல்வி மற்றும் சமூக அபிவிருத ;தியிலும் அக்கறை காட்டி வருகின் றமை பாராட்டத்தக்க விடயமாகும். இதற்கும் மேலாக தேசிய இனப் பிரச்சினையால் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு பல திட்டங் களை மேற்கொண்டு வருகின்றார். இவரது பதவிக் காலத்தில் மலை யகத்தில் ஐயமில்லை. மலையகத் தில் உள்ள டிக்கோயா அரசாங்க வைத்திய சாலையின் மீள் நிர்மாணம் இந்திய அரசின் மற்றுமொரு முக்கிய பங்களிப்பாகும். பெருந ;தோட்ட மாணவர்களின் புலமைப்பரிசில் ஏற்பா டும் மிகப் பிரதானமானது. வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் பெற்றுள்ள முக்கியத்துவம் காரணமாகவே இந்திய அரசும் இதுவரை 1471143 பேருக்கு (ழுஎநசளநயள ஊவைணைநn ழக ஐனெயைn) வழங்கியுள்ளது.

இன்று இந்திய வம்சாவளியினரான சுமார் 19024 பேர் வரை வெளிநாட்டு இந்தியப் பிரiஜ என்ற அந்தஸ்து கிடைக்க ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டவர்கள் காலஞ்சென்ற லலிதா கந்தசாமி மற்றும் எஸ்.எம்.கார்மேகம் ஆகியோர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தனிப்பட்ட முறையில் புது புதுடில்லிக்கு விசேட பயணத்தை மேற்கொண்டு உள் துறை அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுடைய ஆலோசனையின் பேரில் (Pஐழு ஊழரnஉடை) இந்திய வம்சாவளி பேரவை இலங்கையில் அமைக்கப்பட்டதும் அதன் தொடர்ச்சியாக கோபியோ ஸ்தாபிக்க அடித்தளமிட்டவர்கள் லலிதா கந்தசாமி எஸ்.எம்.கார்மேகம் மற்றும் பி.பி.தேவராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

எமது தனித்துவத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதோடு பிரவாசி பாரதீய திவாஸ் 12வது வருடாந்த மாநாடு உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதே இந்திய வம்சாவளியினரின் எதிர்ப்பார்ப்பாகும்.

எச்.எச். விக்கிரமசிங்க...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.