புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
உயிரைக் காப்பாற்ற ரயிலிலிருந்து பாய்ந்த தம்பதிகள் பரிதாப உயிரிழப்பு

உயிரைக் காப்பாற்ற ரயிலிலிருந்து பாய்ந்த தம்பதிகள் பரிதாப உயிரிழப்பு

அன்று 2013 டிசம்பர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகையை முடித்து வரகாபொலை ஹொரகொல்ல மஸ்ஜிதுல்ஹுதா பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய மக்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி எட்டியது. இப்பிரதேச மக்களோடு நெருக்கமான உறவை வைத்திருந்த ஹம்சதுல் மதனி என்பவர் ரயில் விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியே அது. விபத்தில் அவரது மனைவியும் காயமடைந்துள்ளதாக செய்தி பரவியது. ஒரு சில நிமிடங்களில் மற்றொரு அதிர்ச்சி தகவல் அம்மக்களின் காதுகளை அடைந்தது. அவரது மனைவியும் இவ்விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி வரகாபொலை பகுதி எங்கும் பரவியது. உடனடியாக ஹொரகொல்ல மற்றும் கணிதபுர பள்ளிவாசல்கள் ஊடாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைளில் மக்கள் இறங்கினார்கள். இவர்களின் ஜனாஸாக்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளிலும் மக்கள் இறங்கினார்கள். அவர்களுடன் சென்றிருந்த அவர்களது 17 வயது மகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன.

வரகாபொலையை சேர்ந்த வைத்தியரத்ன முதியன்சலாகே மொஹமட் தெளபிக் ஹம்சத்துல் மதனி (வயது 53) மற்றும் தர்கா நகரை சேர்ந்த ஹைருன்நிஸா (வயது 47) தம்பதியினர் 1986 ஆம் ஆண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்து கொண்டவர்களாவர். அதே ஆண்டு தொழில்நிமித்தம் ஹம்சத்துல்மதனி மத்திய கிழக்கிற்கு சென்றார் தமக்கென சொந்தமாக ஒரு வீட்டை நிர்மாணித்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கில் அங்கு சென்று தொழில் செய்து வந்தார். ஈராண்டுகளுக்கு ஒருமுறை நாடு திரும்பி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பின்னர் ஓர் பெண் குழந்தையும் பிறந்தது குடும்பத்தின் 4 அங்கத்தவர்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆரம்பத்தில் வரகாபொல மஸ்ஜித் மாவத்தையில் இருந்த ஹம்சத்துல்மதனி வெளிநாடு சென்று உழைத்து ஹொரகொல்ல ராஸிக் பரீட் மாவத்தையில் சொந்தமாக காணியை வாங்கி வீடொன்றை நிர்மாணித்து வாழ்ந்து வந்தனர். இவர்களின் மகன் மொஹமட் இமாதுக்கு தற்போது வயது 22 ஆகும். மகள் வைத்தியரத்ன முதியன்சலாகே பாத்திமா மஸாஹிமாவுக்கு வயது 17 ஆகும். மகன் இமாத் மத்திய கிழக்கில் தொழில் புரிகின்றார். விபத்தில் உயிரிழந்த பெற்றோரின் ஜனாஸாவில் கூட அவருக்கு கலந்துகொள்ள வாய்ப்பு கிட்டவில்லை.

கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை ஹம்சத்துல் மதனி வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பினார். கடந்த 27 ஆண்டுகளாக மத்திய கிழக்கில் தொழில் புரிந்து வரும் இவர் 10 நாள் விடுமுறையில் நாடு திரும்பினார். தர்கா நகரில் வீடொன்றை கொள்வனவு செய்து அங்கு தமது வதிவிடத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று இருந்த இவர்கள் கடந்த 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று தனது மனைவி மற்றும் புதல்வியுடன் மூவருமாக தர்கா நகரில் தமது உறவினர் வீட்டுக்குச் சென்றார்கள். அன்றைய தினம் காலை தாயார் ஹைருன்நிஸா தனது மகளை அழைத்து மாதாந்தம் பலசரக்கு பொருட்களை கொள்வனவு செய்யும் கடைக்கு கொடுக்க வேண்டிய கடன், துணிமணிகள் வாங்கிய கடைக்கு கொடுக்க வேண்டிய தொகை, நகைக் கடையொன்றுக்கு வழங்க வேண்டிய மிகுதிப் பணம், வீடு, உள்ள காணியுறுதி இருக்கும் இடம் போன்ற வற்றை மகளிடம் இவர் தெளிவாக கூறியுள்ளார். நத்தார் தினத்தன்று முற்பகல் தர்கா நகர் நோக்கிச் சென்ற அவர்கள் அங்கு தங் கியிருந்து மறுநாள் வியாழக்கிழமை தமது அலுவல் களை முடித்துக் கொண்டு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் தர்கா நகரிலிருந்து மாத்தறை யிலிருந்து கண்டிநோக்கி செல்லும் ரயிலில் பயணத்தை தொடர்ந் தார்கள். மனைவிக்கும் மகளுக்கும் ஆசனங்கள் கிடைத்தன. தந்தை மதனிக்கு ஆசனம் கிடைக்க வில்லை. அவர் நின்றவாறு பயணத்தை தொடர்ந்தார். அவர்கள் மேற்கொள்ளும் பயணம் இறுதிப் பயணம் என்பதை அறிந்திருக்கவில்லை. தனது அன்புத் தாயையும் பாசமிகு தந்தையையும் இந்த ரயில் வண்டியில் வைத்துதான் பிரியப் போகின்றேன் என்று மகளும் அறிந்திருக்கவில்லை.

தர்கா நகரிலிருந்து கொழும்பு கோட்டை, ராகம, கம்பஹா, வியாங்கொடை போன்ற ரயில் நிலையங்களை தாண்டி ரயில் சற்று தூரம் சென்றது. அப்போது நேரம் மாலை 6.45 இருக்கும். ரயில் வண்டியின் எஞ்சின் பகுதி தீ பற்றிக் கொண்டதாக பயணிகள் கூக்குரல் இட ஆரம்பித்தனர். வானை நோக்கி கரும்புகை எழ ஆரம்பித்தது. பயணிகள் அனைவரும் ஒலமிட்டனர். அவர்களுள் ஒரு பயண அபாயச்சங்கிலியை இழுந்தார். எனினும் ரயில் வண்டியை நிறுத்தவில்லை. பலமுறை அதனை இழுத்தும் ரயில் நிறுத்தாமல் பயணத்தை தொடர்ந்தது. பயணிகள் தமது கைகளில் இருந்த பயணப் பொதிகளை வெளியே நீட்டி சத்தமிட ஆரம்பித்தனர். அதனை தொடர்ந்து ரயில் சற்று தூரம் சென்று நிறுத்தப்பட்டது.

பயணிகள் அவசர அவசரமாக ரயில் வண்டியை விட்டு இறங்க ஆரம்பித்தனர். அவர்களுள் நின்று கொண்டு பயணத்தை தொடர்ந்த மதனி ஆசனத்தில் அமர்ந்திருந்த தனது மனை வியையும் மகளையும் உடன டியாக இறங்குவோமென்று கூற ஒருவரையொருவர் முண்டி யடித்துக் கொண்டு ரயிலை விட்டு இறங்க ஆரம்பித்தனர். ரயில் நிறுத்தப்பட்ட இடம் ஒரு ரயில் நிலையமல்ல. மிகவும் சிரமமாகவே ரயிலிலிருந்து இறங்க வேண்டியிருந்தது. ரயில் வண்டியின் ஒரு புறம் வயல்வெளி. மறுபுறம் இரட்டை ரயில் பாதையில் ஒரு பகுதி இவர்கள் வயல்வெளி பக்கம் இறங்காமல் மறுபுறம் உள்ள ரயில்வீதியின் பக்கம் இறங்கி னார்கள். முதலில் தாயாரும் தந்தையும் ரயிலிலிருந்து இறங்கினார்கள். கதவோரம் இருந்த மகளை தூக்கி இறக்கி னார்கள். ஓரிரு நிமிடங்கள் செல்லவில்லை. எதிரே கிளி நொச்சியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த கடுகதி ரயில் வண்டி இறங்கிய பயணிகள் மீது மோதுண்டது. இரண்டு ரயில் வண்டிகளுக்கு மத்தியில் இருந்த பயணிகளை இந்த ரயில் வண்டி இழுத்துச் சென்றது. யாழ். தேவி சென்று முடிந்தது. தந்தை ஓரிடத்தில், தாயார் மறுபுறம், பாதுகாப்பாக இருந்த மகள், ரயில் வீதியோரம் உயிருக்காக போராடிக் கொண் டிருந்த தந்தையருகே சென்றார். மகளை பார்த்த தந்தை உம்மாவை பாருங்க மகள் எனக்கொன்றும் இல்லை என்று கூறிய போது தாயிடம் மகள் ஓடிச் சென்றார். அங்கு தந்தையை பாருங்க மகள் எனக்கொன்றும் இல்லை யென தாயார் கூறிய போதிலும் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதை உணர்ந்த மகள் அங்கிருந்த வர்களின் உதவியுடன் படுகாய மடைந்திருந்த தாயாரை முச்சக்கர வண்டியில் ஏற்றினார். தந்தையை ஏற்றச் சென்ற வேளை வேறொரு வாகனத்தில் அவர் எடுத்துச் செல்லப்பட் டிருந்தார். அங்கிருந்து வத்துப் பிட்டிவெல வைத்திய சாலைக்கு விரைந்த போதிலும் தந்தையின் உயிர் அந்த சமயம் பிரிந்திருந்தது. வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த தயாரின் உயிரும் சற்று நேரத்தில் பிரிந் ததை மகள் அறிந்து கொண்டார். தர்கா நகரிலிருந்து வரக்கா பொலைக்கு வரும் வழியில் பெற்றோரை இழந்து தான் ஒரு அநாதையாக மாறுவேன் என்று மகள் ஒரு போதும் அறிந்தி ருக்கவில்லை. பெற்றோரின் உயிர் தன் கண் முன்னால் பிரிந்த அந்த கோரநிகழ்வை எண்ணி மகள் ஓ என கதறி அழுத காட்சி அங்கிருந்தோரின் கண்களை கலங்கச் செய்திருக்க லாமென்பதில் இரு கருத்துக்கு இடமில்லை மரணத்தறுவாயிலும் கணவன் மனைவிக்கிடையே இருந்த அந்த இறுக்கமான உறவு அங்கு பிரதிபலித்தமை உயிருடன் உள்ள ஏனையோ ருக்கும் ஒரு முன்மாதிரி என்பதை மறந்துவிட முடியாது.

இறந்த தம்பதிகளினது ஜனாஸக்களின் மரண விசாரணை வத்துபிட்டிவல வைத்திய சாலையில் இடம்பெற்றது. சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இருவரது ஜனா ஸாக்களும் கணிதபுர ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்ல டக்கம் செய்யப்பட்டது.

எம்.சித்தீக் ஹனீபா

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.