விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03
SUNDAY JANUARY 05 2014

Print

 
சி௧ரம் . . . . . .

சி௧ரம் . . . . . .

'நான் பார்த்த தொழிற்சங்கவாதிகளிலேயே மிகவும் வித்தியாசமானவர் கணேசன் அவர்கள். மலையக மக்களின் நல்வாழ்வு ஒன்றே அவரின் குறிக்கோளாக இருந்தது. அதனால் தான் திரைப்படத்தின் கதையையும் மலையக மக்களின் பிரச்சினையை வைத்து எழுதுமாறு என்னிடம் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார். மலையக மைந்தர்களில் தலைமை வகிக்கக்கூடியவராகவும் இருந்தார்.

- தெளிவத்தை ஜோசப்

'படமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். நடிக நடிகை தேர்வையும் நிறுத்தி விடுங்கள்' இப்படித்தான் ஏதாவது கணேசன் சொல்லப் போகிறாரோ என்ற ஐயத்துடன் தான்,

அவர் பின்னால் சென்றாரர் ராமநாதன். ஆனால்,

அவர் சொன்ன வி'யமோ வேறு.

'அண்ணே…… நடிகர் நடிகையர் தேர்வின் போது, கதாநாயகனை தவிர்த்து மற்ற எல்லோரையும் தெரிவு செய்யுங்கள்' என்று கணேசன் சொன்னதும்,

வியப்புடன் அவரைப் பார்த்தபடியே,

'ஏன் கணேசன், கதாநாயகனை நீங்களே தெரிவு செய்து விட்டீர்களா?' என்று கேட்டார் ராமநாதன்.

'ஆமாம்' என்று சொல்லி விட்டு,

மெல்லச் சிரித்துக் கொண்டார் கணேசன்.

'யாரது?'

ராமநாதன் இப்படிக் கேட்டதும்,

சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்ட கணேசன்,

'நான் தான்' என்று சொல்லியபடியே,

ராமநாதனின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

'உண்மையாகவா சொல்றீங்க? வியப்பை விழிகளில் கட்டிக் கொண்டே கேட்டார் ராமநாதன்.

'ஏன் நான் கதாநாயகனாக நடிக்கக் கூடாதா?'

கேள்விக்கு பதிலாக கேள்வியே பிறந்தது.

'அதுக்கு இல்லண்ணே இது ரொம்பவும் சந்தோ'மான வி'யமாச்சே அததான் கேட்டேன்' மகிழ்ச்சியுடன் சொன்னார் ராமநா தன்.

'நாயகன் பாத்திரத்தில் நானே நடிக்கலாம் என்று இருக்கிறேன் அதனால் மற்ற பாத்திரங்களுக்கு நீங்க நடிக நடிகைகளை தெரிவு செய்யுங்கள்' என்றார்.

அதற்கு பிறகு,

தனது கடமையைச் செய்ய ஆரம்பித்தார் ராமநாதன்.

இதில் முக்கியமான வி'யம் என்னவென்றால்,

கதாநாயகனாக நடிக்கும் எதிர்ப்பார்ப்புடன் வந்த நடிகர் டீன் குமாரை,

வில்லனாக நடிக்க வைத்தார் கணேசன்.

அவருக்கு ஜோடியாக,

பிரபல சிங்கள திரைப்பட நடிகை யான, வீணா ஜயகொடி தெரிவு செய்யப்பட்டார்.

கதாநாயகிக்கு பலத்த போட்டி ஏற்பட்டது.

அன்றைய காலகட்டத்தில்,

பிரபலமாக இருந்த பலரும் வந்திருந்தார்கள்.

ஹெலன்குமாரி போன்றோரும் அடங்குவர்.

இறுதியாக,

சிங்களப் படங்களில் நடன நடிகையாக நடித்து வந்த,

பரினாலை என்ற நடிகை கதா நாயகியாக தெரிவு செய்யப்பட்டார்.

நகைச்சுவை நடிகராக யாரைப் போடுவது என்ற பிரச்சினை எழுந்தது,

எம்.ஜp.ஆர் படங்களில் வரும் நகைச்சுவை நடிகரைப் போல் ஒருவரைப் போட வேண்டும் என்று கணேசன் விரும்பினார்.

அப்போது வானொலி நாடகங்களில் பிரபலமாக இருந்த காலம் அது.

அதில்,

ராம்தாஸ் என்;ற ஒரு நடிகர்,

பிரபலமான நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருந்தார். அந்த ராம்தாஸையே படத்திலும் நகைச்சுவை நடிகராக போடுவதற்கு முடிவு செய்திருந்தார்.

மிகவும் குறுகிய காலகட்டத்தில்,

தெளிவத்தை ஜோசப் அவர்கள் படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டார்.

கதையின்படி,

கதாநாயகனும், வில்லனும் சிறுவயதில் இருந்தே ஒன்றாகப் பழகி வருகின்றார்கள்.

இதன் படி அந்த கதாபாத்திரங்களுக்கு இரண்டு சிறுவர்கள் தேவைப்பட்டார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால்,

அந்த இரண்டு சிறுவர் பாத்திரங்களுக்கும்,

தனது மகன்மார்களையே நடிக் வைப்பதற்கு கணேசன் முடிவு செய்ததுதான்.

அந்த முடிவின்படி,

நாயகன் பாத்திரத்தில் நடித்த கணேசனின் சிறுவயது கால பாத்திரமாக அவரது ஐந்தாவது மகன் பிரபா கரனும் வில்லன் பாத்திரத்தில் நடித்த டீன்குமாரின் சிறுவயது கால பாத்திரமாக கணேசனின் மூத்த மகனாகிய மனோ கரனும் நடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டார். (சிறு வயதிலேயே நடிகர்களாகிவிட்ட மனோவும் பிரபாவும் இப்போதும் அரசியலில் நாயகர்களாகத்தான் பிரகாசிக்கிறார்கள்)

இந்த படத்தில்,

கதாநாயகியின் தந்தையாக நடிப்பதற்கு காலஞ்சென்ற நடிகர் எஸ்.எஸ்.சின்னையாவும் கதாநா யகனின் தந்தையாக நடிப்பதற்கு காலஞ்சென்ற எஸ்.என்.தணரத்;தினமும் தெரிவுசெய்யப்பட்டார். இவர்களோடு நடிகர் ஜவஹர் அவர்களும் நடித்தார்கள்.

இப்போது,

எல்லாப் பாத்திரங்களுக்கும் நடிக நடிகையர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டார்கள்.

அடுத்த கட்டமாக,

படத்திற்கு என்ன பெயர் வைப்பதென்று ஆராய்ந்தார்கள்.

மலைநாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் கதை அமைந்திருப்பதால்,

'புதிய காற்று' என்று பெயர் வைப்பதற்கு முடிவு செய்தார்கள்.

ஓளிப்பதிவாளராக அப்போது பிரபலமாக இருந்த லிலி.டி.கொஸ்தா அவர்களையும் இசையமைப்பாளராக டி.எப்.லத்தீப் அவர்களையும் நியமித்தார்கள்.

இந்த படத்தின் இரு பாடல்களை கவியரசு கண்ணதாசனும் பூவை செங்குட்டுவனும் எழுதியிருந்தார்கள். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே மிகவும் புகழ் பெற்ற பாடல்களாகவே இருந்தன.

அவற்றுள்,

'மே தினம் மே தினம்', 'மலைநாட்டில் ஒரு மாற்றம்' 'பொங்கலோ பொங்கல்' 'ஓஹோ என் ஆசை ராதா' 'என்னம்மா உனைத்தானே' போன்ற பாடல்கள் திரைப்படம் வருவதற்கு முன்பே புகழ் பெற்று விளங்கின.

இந்த படத்தின் காட்சிகள் யாவும் மலையகத்திலே படம் பிடிக்கப்பட்டன.

குறிப்பாக,

பண்டாரவளை பகுதியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டன.

இந்த இடத்தில் முக்கியமான இரண்டு வி'யங்களை சொல்லியாக வேண்டும்.

அதாவது,

பல சிங்கள படங்களில் களியாட்டக்கூட நர்த்தகியாக மட்டுமே தோன்றிய பரினாலை இந்தப் படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதே போல்,

வி.முத்தழகு, கலாவதி சின்னசாமி ஆகியோரும் முதன் முதலாக சினிமாவிற்கு பின்னணிப் பாடகர்களாக அறிமுகமானார்கள்.

'புதிய காற்று' படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போதுதான்,

எவரும் எதிர்ப்பார்க்காத விதத்தில்,

கணேசனுக்கு அந்தப் பிரச்சினை ஏற்பட்டது.

சந்திப்போம் அடுத்த வாரம்


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]