விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03
SUNDAY JANUARY 05 2014

Print

 
2014 ஆம் ஆண்டிற்கான டிசைன்களை அறிமுகப்படுத்தி புத்தாண்டை வரவேற்கும் KAMSINS

2014 ஆம் ஆண்டிற்கான டிசைன்களை அறிமுகப்படுத்தி புத்தாண்டை வரவேற்கும் KAMSINS

இலங்கையின் நவ நாகரிக டிசைன்களை உடனுக்குடன் அறிமுகப ;படுத்துவதில் முன்னிலை பெற்ற கம்சின்ஸ் ஆடையகம், இந்தப் புத்தாண்டில் தன்னுடைய வாடிக்கையாளர்களைப் பரவசப் படுத்தும் பொருட்டு பல புத்தம் புதிய டிசைன்களை அறிமுகப்படுத் தியுள்ளது. ஆடவர், மகளிர், சிறுவர்கள் யாராயினும் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட அழகை மேலும் மிளிரச் செய்யும் வகையில் அவர்கள் மனதுக்குப் பிடித்தமான டிசைன்களை கம்சின்ஸ் கொண்டுள்ளது, எத்தகைய விருந்து வைபவங்களுக்கும் பொருத்தமான விதத்தில் உங்கள் தோற்றத்திற்கு

கம்பீரத்தையும் கவர்ச்சியையும் வழங்குபவற்றைத் தெரிவு செய்ய உதவும் விதத்தில் அலைகடல் போன்ற தெரிவுகள் உள்ளன.

பாரம்பரிய அலங்கார வடிவங்களையும் நவநாகரிகத்தை யும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய மனதைக் கொள்ளை கொள்ளும் டிசைன்களில் புகழ்பெற்ற டிசைனர் நாமங்கள் உருவாக்கிய ஐரோப்பிய செல்வாக்குப் பெற்ற பல வண்ண இந்திய ஆடைகளும் சேலைகளும் கம்சின்சில் உங்களுக்காக உள்ளன. நாகரிக வடிவமைப்பும், நளினமும் நேர்த்தியாக இழைக்கப்பட்டு உங்கள் மேனியை சிறப்பாக அலங்கரிக்கும் வித்தை கம்சினுக்கே உள்ள தனிச்சிறப்பு. இவை பிரத்தியேகமான வடிவமைப்பாகவும் உயர்தரத்தையும் கொண்டவையாக இருக்கின்றமையே கம்சினின் வெற்றியின் பிரதான அம்சங்கள். இதுவே கம்சினின் தொலைநோக்காகவும் உள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளர்களினதும் மனங்கவரும் விதத்தில் ஒவ்வொரு ஆடையையும் தனிப்பட்ட ரீதியில் மெருகூட்டுவதில் கைதேர்ந்த இந்திய அலங்கார வடிவமைப்பாளர்கள் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். தமது வாழ்நாளில் பொன்னான தருணமான திருமண நிகழ்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மண கனுக்கும் மணமகளுக்கும் ஏற்ற நவீன மணமக்கள் ஆடையணிகலன் களையும் கம்சின்ஸ் வழங்குகின ;றது. தமது இனிய கனவு நனவாகும் இத்தருணத்தை மனதில் நீடித்து நிற்கும் விதமாகச் செய்யும் பெறுமதி மிக்க அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட மணமகள் டிசைனர் சேலைகளை மனம் விரும்பியவாறு தெரிவு செய்யலாம். தூய பட்டில் நேர்த்தியான கைவேலைப்பாடு கiளைக் கொண்டு பிரதியில்லாமல் தனித்துவமாக உருவாக்கப்பட்ட இந்த சேலைகள் ஒவ்வொன்றும் உங்கள் வாழ்வின் மிக இனிய தருணத்தில் உங்களைக் கோல மயிலாக அலங்கரிக்கின்றன.

ஒரே கூரையின் கீழ் ஆடவர், மகளிர், சிறுவர் முதலான அனைவருக்கும் பொருத்தமான அணிகலன்களையும் கம்சின்சில் தெரிவு செய்ய முடியும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]