நந்தன வருடம் கார்த்திகை மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 04

SUNDAY NOVEMBER 18, 2012

Print

 
,ந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் சமூக விடயங்களில் அக்கறை கொண்டு செயற்படும் பொருட்டு இந்திய வம்சாவளி மலையக சிவில் சமூக அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் இடம் பெற்ற சிவில் சமூகத்தினரின் ஒன்றுகூடலிலேயே இந்த அமைப்பு உருவாக்கப்பட்

இந்திய வம்சாவளி மலையக தமிழருக்கான சிவில் சமூக ஒன்றியம்

,ந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் சமூக விடயங்களில் அக்கறை கொண்டு செயற்படும் பொருட்டு இந்திய வம்சாவளி மலையக சிவில் சமூக அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் இடம் பெற்ற சிவில் சமூகத்தினரின் ஒன்றுகூடலிலேயே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள் ளது. கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட மலையக கல்வியாளர்கள், சமூகசேவை யாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய சமூக அபிவிருத்தி நிறுவகத் தின் தலைவர் பி. முத்துலிங்கம், இன்று இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மலையக மக்கள் வாழ்கின்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் மலையக மக்களுக்கான உரிமைகள், மலையக மக்கள் மேற்கொள்ள வேண்டிய பரப்புரைகள், 13ஆவது அரசிய லமைப்பு சீர்திருத்தம் மற்றும் அதனாலான பாதிப்புகள், இது தொடர்பிலான தற்போதைய பரப்புரைகள் போதுமானதாக இல்லை எனவும் சர்வதேச ரீதியாக இந்த மக்களின் பிரச்சினை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பேராசிரியர் சோ. சந்திரசேகரன், மலையக மக்கள் பற்றி தெரிந்துகொள்ளாமை வரலாற்று ஆய்வாளர்களின் தவறேயன்றி அது மலையக கல்வியாளர்களினதோ மக்க ளதோ குறைபாடு இல்லை என்றார். மலையக மக்கள் பற்றி ஆய்வாளர்கள் பலரும் பல்வேறு ஆய்வுகளை எழுதியுள்ளனர் என்றும் காந்தி, நேரு பரம்பரையினரைத் தெரியாத மக்கள் இன்னும் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார். மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதில் சிங்களத் தலைவர்களை விடவும் மலையக அரசியல் தலைவர்களே விரும்பமின்மையை வெளிக்காட்டினரெனத் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ. லோரன்ஸ், எமது முன்னணி தமது சேவை பரப்பு எல்லைக்கு உட்பட்ட வகையில் பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்துக்கொள்வதில் பேரின வாதத் தலைவர்களுடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட நேர்ந்தமையை விபரித்தார்.

திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தை. தனராஜ், 1950-1960 காலப்பகுதிகளில் நிலவிய நிலைமைகள் இன்று இல்லை. கல்வியாளர்கள் சிந்தனை யாளர்களால் பிரச்சினைகளை அடையாளம் காண முடிகின்றது. மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் தெளிவுநிலை காணப்பட்டபோதும் அவற்றுக்கான தீர்வு வழிமுறைகள் தெளிவானதாக இல்லை என்றார். கல்வியாளர் களுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே ஒரு புரிதலை ஏற்படுத்தி மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முனைய வேண்டும் என தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் எம். திலகராஜ், மலையக அரசியலில் கல்வியாளர்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டியதன் தேவை எழுந்துள்ளதாகவும் பாமர தொழிலாளர்கள் தெரிவு செய்யும் அரசியல் பிரதி நிதிகளிடம் சிவில் சமூகம் அபரிமிதமான எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது. மலையகம் 1950 - 60 காலப்பகுதிகளில் இருந்ததைவிட கல்வி மற்றும் சிந்தனை மட்டத்தில் உயர் வடைந்துள்ளபோதிலும் அரசியல் தொழிற்சங்க நிலைமைகளில் பலவீனமான நிலைமையை அடைந்துள்ளது. இன்றும்கூட 15 லட்சம் மக்களில் ஒரு இலட்சத்துக்கு குறைவான தொழிலாளர்கள் தமது தொழிற்சங்க பலத்தினூடாக பெற்றுக்கொடுக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத் தைக் கொண்டே ஒட்டுமொத்த மலையக மக்களதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைவது நடைமுறையிலுள்ள குறைபாடாகும்.

சுயாதீன ஊடகவியலாளர் எஸ். பிரபாகரன், 15 லட்சம் மலையக மக்களில் லட்சம் பேர் மாத்திரமே இந்திய வம்சாவளித்தமிழர் என பதிவு செய்து கொண்டுள்ளனர். ஏனையோர் இலங்கைத்தமிழர் என பதிவு செய்கின்றனர். இதற்கு காரணம் இவர்கள் இந்திய அடைமொழியை விரும்பவில்லை. பெரும்பாலான மக்கள் ‘மலையகத்தமிழர்’ எனும் அடைமொழியையே விரும்புகின்றனர். எனவே நாம் நமது தேசியத்தை மலையகத்தமிழர் என உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ், மலையகத் தமிழரா? இந்திய தமிழரா? என்பதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. தற்போது மலையகப்பகுதி மக்கள் வேகமாக நகரமயமாகி வருவதாகவும் அது தொடர்பாக கலாநிதி சந்திரபோஸ் மேற்கொண்ட ஆய்வுகள் வரவேற்கத்தக்கது என்றார்.

அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த எஸ். முருகையா, சட்டவிரிவுரையாளர் யசோதரா, ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் செயற்பாட்டாளர் வி.குமார், சட்டத்தரணி சேனாதிராஜா ஆகியோரும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் இறுதியில் மலையக மக்களின் அரசியல் இருப்பு, அவர்களின் அரசியல் உரிமைகள் பற்றிய கவனம் அதிகரிக்க வேண்டியதன் தேவை ஏற்பட்டுள்ள தாகவும் மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக தெளிவு நிலை காணப்பட்டபோதும் அவற்றுக்கான தீர்வு வழிமுறைகள் தெளிவானதாக இல்லை. எனவே மலையக கல்வியாளர்கள் செயற்பாட்டாளர்கள். இணைந்த கட்சி சார்பற்ற சுயாதீன சிவில் சமூக அமைப்பு ஒன்றின் தேவைப்பாடு கருதி இந்திய வம்சாவளி மலையக சிவில் சமூக அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் ஆரம்ப நிலையில் பின்வருவோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். பி.பி.தேவராஜ் (முன்னாள் இந்து கலாசார அமைச்சர்), பேராசிரியர் சோ. சந்திரசேகரன் - ஓய்வுபெற்ற கல்வித்துறை பேராசிரியர், எம்.வாமதேவன் - தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், தை. தனராஜ் - சிரேஷ்ட விரிவுரையாளர் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம், அருட்தந்தை, சக்திவேல் - சமூக செயற்பாட்டாளர், பி.முத்துலிங்கம் - தலைவர், சமூக அபிவிருத்தி நிறுவகம், க.யசோதரா - தலைவர் - சட்டத்துறை, இலங்கை திறந்த பல்கலைக் கழகம், லெனின் மதிவானம் - பிரதி ஆணையாளர் - கல்வி வெளியீட்டுத் திணைக்களம், ஜி.சேனாதிராஜா - சட்டத்தரணி (கொழும்பு), எம்.முத்துசாமி - தொழிலதிபர்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மலையக மக்கள் வாழ்கின்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் விஜயம் செய்து அதனை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளை முதற்கட்டமாக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக குழுவின் இணைப்பாளரான பி. முத்துலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் அரசியல் கட்சிகள் சார்பில் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன பங்குபற்றின.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]