விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

Print

 
கண்டியின் கொமர்'ல் கிரடிட் வங்கி அலுவலகம் கொழும்பில் திறந்துவைப்பு

கண்டியின் கொமர்'ல் கிரடிட் வங்கி அலுவலகம் கொழும்பில் திறந்துவைப்பு

கண்டியை தலைமையகமாகக் கொண்ட நிதி றிறுவனமான கொமர்ஷல் கிறடிட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு துரித சேவையை வழங்கும் பொருட்டு கொழும்பு நகரில் புதிய அலுவலகமொன்றை வைபவ ரீதியாக திறந்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கொமர்ஷல் கிறடிட் வங்கிக் கிளை யின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

ஸ்தாபிக்கப்பட்டு 28 ஆண்டுகளின் பின்னர் கொழும்புக்கு வந்துள்ள கொமர்ஷல் கிறடிட் நிறுவனம் ஒரு புதிய இலச்சினையை அறிமு கப்படுத்தி வைத்துள்ளதுடன், ஒரு மணி நேரத்திற்கு குறைந்த நேரத்தில் வாகனக் கடன் வசதியை வழங்குதல் மற்றும் முதலீடு களுக்கான பிரதிபலன்களை அதிகரிக்கும் வகையில் பெறுமதிமிக்க வைப்பாளர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குவதன் ஊடாக வெகுமதிகளை வழங்குதல் போன்ற திட் டங்கள் குறித்தும் அறிவித்துள்ளது.

பல்வேறுபட்ட நிதித்துறை உற்பத்தி பொருள் தொடரினையும் ஐந்து கிளைகள் மற்றும் 12 சேகரிப்பு நிலையங்களின் வலையமைப்பை யும் கொண்டுள்ள இக்கம்பனி, 2010ஆம் ஆண்டின் தொனிப் பொருளாக “உங்கள் கனவுகளை வெளிப்படுத்துங்கள்” என்னும் சுலோகத்தினை இணைத்துக் கொண்டுள்ளது.

கொமர்ஷல் கிறடிட் இலங்கையில் துரித வளர்ச்சி கண்டுவரும் கம்பனிகளுள் ஒன்று எனத் தெரிவிக்கும் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் பிரதி பொது முகா மையாளரான எதுசூரிய, “இத்தகைய வளர்ச் சியை பேணுவதற்கு எடுக்கப்படும் இடைவி டாத பிரயத்தனங்களுக்கு நாம் முன்னுரிமை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளோம். சேவைக ளில் தரங்களை முன்னேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.

1982 ஒக்டோபரில் கண்டியில் தோற்றம்பெற்ற கொமர்ஷல் கிறடிட் நிறுவனம் 1988ஆம் ஆண் டின் 78ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 2000 ஐ.எஸ்.ஓ சான் றிதழ் பெற்ற நிதி நிறுவனமாக இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையில் இயங்கு கிறது. கண்டியில் தனது தலைமையகத்தை கொண் டிருப்பதுடன் அவிசாவளை, இங்குராக்கொடை, அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், கலன் பிந்துனுவெவ, கல்நேவ, எம்பிலிபிட்டிய, தம் புள்ள, தெஹியத்த கண்டிய, நீர்கொழும்பு, மஹியங்கனை, தம்புத்தேகம, நுவரெலியா, பிலியந்தலை மற்றும் கொழும்பு ஆகிய இடங் களில் தனது 16 கிளைகளை கொண்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2008 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]