ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
tuesday, August 26, 2014

Print

 
எஸ்.எம்.சுப்பையா ±என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு

எஸ்.எம்.சுப்பையா ±என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு

னிஜீhகாவை சென்ட்ரல் ஸ்டுடியோவின் நிறுவனமான ஜூபிடர் பிக்சர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளரான எஸ்.எம்.சுப்பையா, அந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரும் பின்னர் பட்சிராஜா பிலிம்ஸ் அதிபரானவருமான எஸ்.எம். ஸ்ரீராமுலுவின் சகோதரர் எஸ்.எம்.சுப்பையாவை சுருக்கமாக எஸ்.எம்.எஸ். என்றும் நாயுடு என்றும் திரையுலகத்தினர் அழைத்தனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் எஸ்.எம். சுப்பையாவுக்கும் நல்ல நட்புறவு உண்டு. எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்திற்கு இசையமைத்தவர் சுப்பையாதான். அதில்தான் முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது (1947). ‘காசினிமேல் நாங்கள்’ என திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம்.என். நம்பியார் வாயசைத்தார்.

1949 இல் எஸ்.எம்.எஸ். இசையில் வெளியான கன்னியின் காதலி என்ற படத்தில்தான் தமிழ்த் திரையில் புகழ் கொடி நாட்டிய கவியரசர் கண்ணதாசன் முதன் முதலில் பாடல் எழுதினார். கலங்காதிரு மனமெ. உன் கவலைகள் யாவும் நனவாகும் ஒரு தினமே’ என்ற பாடலை கண்ணதாசன் எழுத அதனை கே.வி.ஜானகி பாடினார்.

அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் தமிழ்த் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ‘வேலைக்காரி படத்திற்கும் எஸ்.எம். சுப்பையாதான் இசை. ‘ஓரிடம் தனிலே நிலையில்லாத உலகினிலே’ என்ற பாடல் அப்படத்தில் இடம்பெற்றது.

மேல்நாட்டு இசைக்கருவிகள் திரையிசைக்குப் பயன்படுத்தப்பட்ட போதும் இந்தியத் தன்மை கொண்ட இசையிலேயே நாட்டம் கொண்டிருந்தார் எஸ்.எம். சுப்பையா. மேல்நாட்டு பாணி நடிகரான சந்திரபாபுவை ‘குங்குமப் பூவே கொஞ்சு புறாவே’ என்ற பாடல் மூலம் திரையில் பாட வைத்தவர் சுப்பையாதான்.

திரை இசைக்காக முதன் முதலாக தங்க இசைத்தட்டு விருது பெற்ற பெருமைக்குரிய ‘சிங்கார வேலனே தேவா’ பாடலை எஸ். ஜானகியின் குரலில் பாட வைத்தவரும் எஸ்.எம். சுப்பையாதான் (கொஞ்சும் சலங்கை) ‘திருடாதே பாப்பா திருடாதே (திருடாதே), ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்) ‘நீ எங்கே என் நினைவுகள் அங்கே’ (மன்னிப்பு), ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ (நாடோடி மன்னன்) என என்றும் அழியாத பாடல்கள் பலவற்றைத் தந்துள்ளார் எஸ்.எம். சுப்பையா.

    1950 களின் இறுதியிலும் 1960 களின் தொடக்கத்திலும் புகழில் இருந்த அவர் 1976 ஆம் ஆண்டில் “கவிராஜ காளமேகம்’ என்ற படத்திற்கு கடைசியாக இசையமைத்தார். எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர். சுப்பராமன், ஆர். சுதர்சனம் போன்றவர்களும் எஸ்.எம். சுப்பையா இசையமைத்த காலத்தில் தமிழ்த் திரையுலகில் இசையமைத்து வந்தனர்.

‘மாசிலா உண்மைக்காதலே’, ‘அழகான பொண்ணு நான். அதற்கேற்ற கண்ணுதான்’ போன்ற பாடல்கள் இடம்பெற்ற அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம்.

தட்சிணாமூர்த்தியின் இசையில் வெளியானது. இசைச்சித்தர் என்றழைக்கப்பட்ட சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன் பாடியதுடன் இசையும் அமைத்து வந்தார். ரத்தக்கண்ணீர் படத்தின் பாடல்கள் இவரது இசையமைப்பில் உருவானவை.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]