ஹிஜ்ரி வருடம் 1434 ரஜப் மாதம் பிறை 30
விஜய வருடம் வைகாசி மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JUNE, 10, 2013

Print

 
மனிதனைப் போன்று குரங்கும் விரக்தியடையுமாம்

மனிதனைப் போன்று குரங்கும் விரக்தியடையுமாம்

மனிதனைப் போன்று குரங்கும் விரக்தியடையுமாம் மனிதன் குரங்கிலிருந்து பிறந்ததாகவே நீண்டகாலமாக நம்பப்படுகிறது. மனித இனத்துக்கு மிகவும் நெருங்கியவையாகக் கருதப்படும் சிம்பான்ஸி மற்றும் பொனபோ இனக் குரங்குகள், மனிதர்களைப் போலவே, தங்களது முடிவுகள் பலனளிக்காவிட்டால், உணர்ச்சிவசப்படும் இயல்புள்ளவை என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்த மனித குரங்குகள், தங்களது யுக்திகள் தோல்வியில் முடிந்தால், தங்களைத் தாங்களே பிறாண்டிகொள்வதன் மூலமோ அல்லது உரத்துக் குரலெழுப்புவதன் மூலமோ தங்களது கோபாவேசத்தைக் காட்டுகின்றன என்று ட்யூக் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆப்ரிக்க வன விலங்கு சரணாலயங்களில் இருக்கும் இந்த குரங்குகளுக்காக, முடிவுகள் எடுக்கும் திறன் அடிப்படையில் அமைந்த இரு விளையாட்டுக்களை அந்த விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

இந்த இரு விளையாட்டுகளில் ஒன்று, பொறுமையை சோதிக்கும் அடிப்படையில் அமைந்தது. மற்றொன்று ஆபத்தான முடிவுகளை எடுக்கும் திறனை சோதிக்கும் அடிப்ப டையிலானது. இந்த விளையாட்டுகளில் கலந்து கொண்ட குரங்குகளின் உணர்வுகள், விரக்தி, வருத்தம் போன்ற, மனித உணர்வுகளுக்கு மிகவும் அடிப்படையாக இருக்கும் உணர்வுகளை ஒத்ததாகவே இருந்தன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானவை என்று இனிமேல் கூற முடியாது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]