ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

பஸ்ஸில் எஸ். எஸ். ஆருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தவர் எம். ஜி. ஆர்.

பஸ்ஸில் எஸ். எஸ். ஆருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தவர் எம். ஜி. ஆர்.

பஸ்ஸில் எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தவர் எம்.ஜி.ஆர் என்று படபடவென்று பழைய நினைவுகளைக் கொட்டினார் ‘லட்சிய நடிகர்’ எஸ். எஸ். ஆர். “எம். ஜி. ஆர். ஆரம்ப காலத்தில் எப்படியிருப்பார் தெரியுமா? தோளைத் தொடும் அளவிற்கு பாகவதர் முடி, கழுத்தில் ருட்ராட்சம், நெற்றியில் விபூதிப்பட்டை, இடுப்பில் காவி கதர் வேட்டி, கதர்ச்சட்டை என்று அந்த கெட் - அப்பே பிரமாதமா இருக்கும்.

அப்போது ‘அசோக்குமார்’ உட்பட சில படங்களில் தியாகராஜ் பாகவதரோடு சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டி ருந்தார். நான் ‘டி. கே. எஸ். சகோதரர் கள் நாடக சபாவில்’ என். எஸ். கே, எஸ். வி. சுப்பையா, எம். என். ராஜம் போன்றவர்களுடன் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் கோவையிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு, நண்பர்களைப் பார்க்க அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பிலிருந்து ஏறுகிறேன்.

அதே பஸ்ஸில் எம். ஜி. ஆரும் ஏறுகிறார். அவர், கலைஞர், நம்பியார் போன்றோர் அப்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாச சம்பளத்திற்குப் பணியாற்றுகிறார்கள். எம். ஜி. ஆரைப் பார்த்து விட்டு ‘வணக்கம்’ சொல்கிறேன். அப்போது தான் முதன் முறையாக நாங்கள் பேசுகிறோம். ‘வாங்க தம்பி’ என்று வாஞ்சையாக அழைத்து, எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார். ‘பெரிய ஆளா வருவீங்க.....’ என்று வாழ்த்தினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி