ஹிஜ்ரி வருடம் 1434 ரஜப் மாதம் பிறை 30
விஜய வருடம் வைகாசி மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JUNE, 10, 2013

Print

 
இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு பாகிஸ்தான் மேலும் சலுகைஜீ

இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு பாகிஸ்தான் மேலும் சலுகைஜீ

* அவர்களின் சலுகை பட்டியல் 28 உருப்படிகளை பரிசீலித்தல்

* மேலும் நான்கு உருப்படிகளுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும்

* கடந்த சில நாட்களில் மொத்தம் ஏழு பொருட்கள் மீது வரி தளர்வு

* இலங்கை - பாகிஸ்தான் சிறந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை பயன்படுத்த முடியும்

* இலங்கை - பாகி. வர்த்தகம் 174% உயர்ந்துள்ளது.

,லங்கை- பாகிஸ்தான் இருதரப்பு வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு மீண்டும் நெருக்கமாகியுள்ளது. இதன் பிரகாரம் கடந்த 24 ஏப்ரல் பாகிஸ்தான் இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி சலுகைகளை தாராளமயப்படுத்துவதற்கு முடிவு செய்தது.

ஏற்றுமதி பொருட்கள் மீதான சலுகைகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில், நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். பாகிஸ்தானின் சமீபத்திய கால நடவடிக்கைகள் இலங்கை- பாகிஸ்தான் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் சிறந்த பயன்பாட்டை நோக்கி நகர உதவும் என்று நம்புகிறேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.

கடந்த வாரம் அவரது அமைச்சில் இலங்கை ஏற்றுமதியாளர்களை சந்தித்து சமீபத்திய பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மீதான முன்னேற்றங்கள் பற்றி உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த சந்திப்பில் இலங்கையை சார்ந்த பிரசித்தி பெற்ற பாகிஸ்தான் ஏற்றுமதி நிறுவனங்களானதினீAdamjee Lukmanjee, Nature’s Beauty Creation, Expolanka Holdings, hettigoda Industries, Anverally Sons,MK Lanka Exports and USA Trading அமைச்சரை சந்தித்தனர்.

சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் அதிக தயாரிப்புகளை வாங்குபவர்களாக, இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 10% சதவீதம் சார்க் பிராந்திய நாடுகளுக்கு இலங்கையினால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

விசேட அழைப்பினை அடுத்து இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேஷி கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்தபோது, இலங்கையின் ஏற்றுமதி இப்பொருட்கள் (கச்சா தேங்காய் எண்ணெய்விCrude ) வெற்றிலை, மற்றும் குப்பி போத்தல்கள் குளிரூட்டும் இயந்திரங்கள்) மீதான தீர்வைகளை பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த தகவலை அறிவித்திருந்தார்.

இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற செயலக மட்ட அமர்வின்போது இலங்கையின் பல ஏற்றுமதி பொருட்கள் மீது பாகிஸ்தான் சலுகைகள் தந்திருப்பதாக அமைச்சர் அறிவித்திருந்தார்.

அத்துடன் புதிய தயாரிப்புகளான மூலிகை, கூந்தல் எண்ணெய், கொசு விலக்கி சுருள்கள், பீங்கான் பொருட்கள் மற்றும் மின்சார சுவிட்சுகள் ஆகிய பொருட்கள் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இலங்கையில் இருந்து மேலும் பெற்றுக்கொள்ளும் ஆயுர்வேத தயாரிப்புக்கான புளிபானங்கள், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாய பொருட்கள் மீதான சலுகைகள் பரிசீலிக்க பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேற்படி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செயலாளர் மட்ட கூட்டத்தில் இலங்கை சார்பாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் செயலாளர், அனுர சிறிவர்தன கலந்துகொண்டனர். வர்த்தக திணைக்களத்தின் புள்ளிவிபர அடிப்படையில் இலங்கை 5000 – 6000 (மெ. தொ.) வெற்றிலையை பாகிஸ்தானுக்கு வருடாந்தம் ஏற்றுமதி செய்கின்றது. அதனை தொடர்ந்து இலங்கை, தாய்லாந்து, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு ஏக வழங்குனராகவும் ஈடுபடுகின்றது.

பாகிஸ்தான் வெற்றிலைக்கான தனது இறக்குமதி தீர்வினை 35 வீதமாக குறைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அமெரிக்க டொலர் 5.77 மில்லியன் வெகுமதியான வெற்றிலையினை பாகிஸ்தானுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்தது. அத்துடன் கச்சா தேங்காய் எண்ணெய் வரியினை (Crude Coconut oil) 50 வீதமாகவும் குறைத்து, அது ஜுலை மாதத்திலிருந்து அமுலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

2005 ஆம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் அமுலாக்கியதிலிருந்து எமது இரு நாடுகளுக்கான வர்த்தக உறவு பாரிய அனுபவத்துடன் வளர்ச்சியுற்றது.

2005 ஆம் ஆண்டு எமது மொத்த வர்த்தகம் அமெரிக்க டொலர் 158 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன், 174 வீத வளர்ச்சியினை காட்டுகின்றது என அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக சமநிலை எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு இயற்கை றப்பர், காய்கறி பொருட்கள், தேங்காய், பிரேசில் கொட்டைகள், தேயிலை, மரம், புண்ணாக்கு, புதிய வாயு டயர்கள் (றப்பர்), தேங்காய் (கொப்பரை) எண்ணெய் ஆகியன இலங்கையின் முக்கிய ஏற்றுமதி ஆகின்றன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]