விகிர்தி வருடம் தை மாதம் 06ம் திகதி வியாழக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஸபர் பிறை 14
THURSDAY, JANUARY,20, 2011

Print

 
கிளிநொச்சியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்

கிளிநொச்சியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்

கிளிநொச்சி நகரில் பொங்கல் விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கிளிநொச்சி மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி பாரதி வித்தியாலயம், கனகபுரம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் 57வது படை அதிகாரி விக்கிரமசூரிய, கிளிநொச்சி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உடவத்த 571வது படையணி தளபதி கேணல் கத்துருசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வன்னி அமைப்பாளர் கீதாஞ்சலி, திரைப்பட தயாரிப்பாளர் செவ்வேள் உட்பட பெருமளவு பொது மக்களும் அரச உத்தியோகத் தர்களும் கல்வி சமூகத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தி யோகத்தர் தலைமையில் இப்பொங்கல் விழா இடம்பெற்றது.

(ச)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]