வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

கணினி வைரஸ்

கணினி வைரஸ்

கணினி வைரஸ் என்று சொல்லப்படுபவை கணினி யின் செயற்பாட்டை மோச மான வகையில் பாதிக்கக் கூடிய சிறிய புரோகிராம்கள் ஆகும்.

கணினியின் செயற்பாடுகளுக்கு ஆதாரமானவை புரோகிராம்கள் தானே? சரி, புரோகிராம்கள் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட வகையில் செயல்பட வேண்டு மென்று நாம் கணினிக்குக் கொடுக்கின்ற கட்டளைகளின் தொகுப்புதான் புரோகிராம் எனப்படுகிறது. இந்தக் கட்டளை க்கு ஏற்றபடிதான் கணினி செயற்பட்டு நமக்குத் தேவையான பயன்களைத் தருகிறது.

ஒரு புரோகிராம் கிடைத்தால் அதற்கேற்ற வகையில் செயல்படு வதுதான் கணினியின் நியதி. அந்தப் புரோகிராம் எப்படிக் கிடைக்கிறது. அது என்ன செய்யச் சொல்கிறது போன்ற விஷயங்க ளைக் கணினி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தன்னையே அழிப்பதற்கான ஒரு புரோகிராம் கிடைத்தாலும் கணினி அதை நடைமுறைப் படுத்தும்.

கம்ப்யூட்டரின் இந்த பலவீனத் தைப் பயன்படுத்திக் கொண்டு தொல்லை தரும் புரோகிராம் களைத் திணித்தால் அவற்றைத் தான் நாம் கணினி வைரஸ் என்கிறோம். மனித உடலின் எதிர்ப்புச் சக்தியின் பலவீனத்தை நோய் வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்வதும் இப்படித்தான். கணினியைப் பயன்படுத்துபவரின் நோக்கத்திற்கு விரோதமாக கம்ப்யூட்டரைச் செயற்பட வைக்கின்றன அந்த வைரஸ்கள்.

இவை கணினியின் உள்ளே பாது காக்கப்பட்டிருக்கின்ற விபரங்களை அழித்துவிடும். அல்லது கணினி யின் செயல்பாட்டையே தாறுமா றாக்கி விடும். இப்படிப்பட்ட பெரிய தீமைகளைச் செய்யாமல், சிறிய தீமைகளைச் செய்கின்ற வைரஸ்களும் உண்டு. இவ்வகை யான வைரஸ்கள், கணினியைப் பயன்படுத்துபவர்களைக் கேலி கிண்டல் செய்வது, அவர்களின் நேரத்தை விரயமாக்குவது போன்ற சாதாரண தொந்தரவுகளைக் கொடுக்கின்றன.

ஒரு மனித உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு சாதாரண வைரஸ்கள் பரவுவது போல கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு இந்த வைரஸ்களும் பரவுகின்றன. இன்றைய கணினி கள் எல்லாம் தொலைபேசி கேபிள்கள் மூலமாகவோ, செயற் கைக் கோள்கள் மூலமாகவோ ஒன்றோடொன்று தொடர்புடைய வையாக இருக்கின்றன.

இந்த வலைப்பின்னல் அமைப்பில் ஏதேனும் ஒன்றைப் பாதிக்கிற வைரஸ், தொடரந்து சம்பந்தப் பட்ட மற்ற கம்ப்யூட்டர்களுக்கும் பரவும். அப்படி ஒரு வலைப் பின்னல் அமைப்பையே முற்றாக அழிக்கக்கூடிய வலிமைகொண்டவை இந்த வைரஸ்கள். எனவேதான் இத்தகைய வைரஸ்களை ஏவுவது என்பது சட்ட விரோதமான குற்றச் செயலாக, ‘சைபர் கிரைம்’ எனும் பெயரில் குறிக்கப்படுகிறது.

முழுவதுமாக கம்ப்யூட்டரைச் சார்ந்து வாழ்கிற ஒரு சமூகத்தையே இந்த வைரஸ்கள் ஸ்தம்பிக்கச் செய்துவிடும். வைரஸ்கள் மூலமா கக் கம்ப்யூட்டர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யவும் முடியும். வைரஸ்களைத் தடுப்பதற்கு பலவிதமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.

அவற்றில் முக்கியமானது, வைரஸ்களைக் கண்டுபிடிக்கவும் அழிக்கவும் திறனுடைய புரோகிராம்களை கம்ப்யூட்டரில் பாதுகாப்பது என்பதுதான். இத்தகைய புரோ கிராம்களால் சில வகைப்பட்ட வைரஸ்களைக் கண்டுபிடித்து அழிக்க முடியும். ஆனால் தினந்தோறும் வெளிவருகின்ற புதுப்புது வைரஸ்களை இந்தப் பழைய புரோகிராம்களால் ஏதும் செய்ய இயலாது.

பழைய புரோகிராம்களை புதுப்பித்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் புதிய வைரஸ்கள் தோன்றியிருக் கும். மற்றொரு பாதுகாப்பு முறையும் கையாளப்படுகிறது. உண்மையான பயன்படுத்துபவ ரைத் தவிர மற்ற யாரும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாதபடி இருக்கும் இந்த முறை. ஆனால் இது கம்ப்யூட்டர் பயன்படும் எல்லாத் துறைகளுக் கும் ஏற்ற முறையாக இல்லை.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»