மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
விவாதத்தை முழுமையாக செவிமடுத்த ஜனாதிபதி

விவாதத்தை முழுமையாக செவிமடுத்த ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தை முழுமையாக செவிமடுத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை முன்மாதிரியான ஜனாதிபதியென்பதை நிரூபித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. நேற்றையதினம் ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட 22 அரச நிறுவனங்களுகான ஒதுக்கீடுகள் பற்றிய குழுநிலை விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றம் வருகைதந்த ஜனாதிபதி, முற்பகல் 10.40 மணியளவில் சபைக்குள் பிரவேசித்தார். ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

10.45 மணிக்கு அவரை உரையாற்றுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைத்தபோதும், தான் பின்னர் உரையாற்றுவதாக கையசைத்தார்.

ஆசனத்திலிருந்தவாறு ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரைகளை செவிமடுத்ததுடன், அப்பப்போ குறிப்புக்களையும் எடுத்துக் கொண்டிருந்தார். கடந்த கால ஜனாதிபதிகள் குழுநிலை விவாதங்களில் கலந்துகொண்டாலும் தமது உரைக்கான நேரத்தில் மாத்திரம் சபைக்குள் நுழைந்து உரையாற்றிவிட்டு வெளியேறிச்சென்றுவிடுவார்கள். இருந்தபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் சம்பந்தப்பட்ட ஒதுக்கீட்டுக்கான விவாதத்தில் முழுநேரமும் சபையில் அமர்ந்திருந்து உரைகளை செவிமடுத்ததன் மூலம் முன்னுதாரனமான ஜனாதிபதி என்பதை மீண்டும் உரைமுறை அவர் நிரூபித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]