மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
இசையில் ஒரு நாயகனாக இருந்தால் போதும்

இசையில் ஒரு நாயகனாக இருந்தால் போதும்

கொலவெறி பாடல் வெளியாகி 5 ஆண்டுகளானதையொட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் இசையமைப்பாளர் அனிருத்.

#KolaveriToColdWater என்ற ட்விட்டர் ஹேஷ்டேக்கில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் எப்போது படங்களில் நடிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அனிருத், நடிப்பு எனக்கு சரிபடாது என நினைக்கிறேன். என்னுடைய பேஷனே இசை தான். 5 வருடங்களில் 13 ஆல்பங்கள் கொடுத்திருக்கின்கறேன். அந்த இடத்தைக் காப்பாற்றுவது தான் என் எண்ணமாக இருக்கிறது.

நான் தற்போது செய்து வருவதே எனக்கு பிடித்திருக்கிறது. வேறு விஷயங்களில் என்னுடைய கவனத்தை திசை திருப்ப நான் விரும்பவில்லை. எனக்கு இசையில் ஒரு நாயகனாக இருந்தால் போதும், படத்தில் நாயகனாக தேவையில்லை என்று பதிலளித்திருக்கிறார்.

2017ம் ஆண்டில் 'அஜித் - சிவா படம்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'பவன் கல்யாண் - த்ரிவிக்ரம்', 'ஜெயம் ராஜா - சிவகார்த்திகேயன்' ஆகிய படங்கள் தன்னுடைய இசையமைப்பில் வெளிவரும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் அனிருத்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]