வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 

ஆறு உப குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பு

நாடு முழுவதும் விநியோகிக்க பிரதமர் பணிப்பு
ஜனவரியில் முழு நேர விவாதம்

அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் நேற்றையதினம் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிர மசிங்க இந்த அறிக்கைகளை சமர்ப்பித்தார். உபகுழுவின் அறிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் ஜனவரி 9ஆம், 10ஆம், 11ஆம் திகதிகளில் முழுநேர விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கூடவுள்ள அரசியலமைப்பு சபையில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ், அரச சேவைகள் மற்றும் மத்தியும் சுற்றயல் உறவுகள் பற்றிய ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

விவரம்»

 

கண்டி, உடுதும்பர கிராமத்திலுள்ள தொங்கு பாலத்தையே படத்தில் காண்கிறீர்கள். மக்கள் தினமும் அச்சத்தோடு இந்த அவலத்தை கடந்துதான் தங்களது அன்றாட தேவைக்காக செல்ல வேண்டியுள்ளது.பாலத்தை திருத்துவதற்காக பொருட்கள் கொண்டுவரப்படுள்ள போதும் நிர்மாணப் பணிகள் இன்னுமில்லை.
(படம்: -துஷார ​ெபர்னாண்டோ)

Other links_________________________

விவாதத்தை முழுமையாக செவிமடுத்த ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தை முழுமையாக செவிமடுத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை முன்மாதிரியான ஜனாதிபதியென்பதை நிரூபித்துள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. நேற்றையதினம் ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட 22 அரச நிறுவனங்களுகான ஒதுக்கீடுகள் பற்றிய குழுநிலை விவாதம் நடைபெற்றது.

விவரம்»

பொருத்து வீடமைப்புக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

கல் வீடுகளே சிறந்ததென சுட்டிக்காட்டி ஜனாதிபதி, பிரதமருக்கு அவசரக் கடிதம்

வடக்கில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் 65 ஆயிரம் பொருத்து வீடுகளுக்குப் பதிலாக நிரந்தர கல் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். மூன்று தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை பூர்த்தி செய்யப்படாதுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டன.  

விவரம்»

நல்லூர் முன்றலில் 27ல் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது எமது உரிமை அதை யாராலும் தடுக்க முடியாது. நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என வடமாகண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பது தொடர்பில் நேற்று சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.  

விவரம்»

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.