மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
பிபா கால்பந்து தரவரிசை வெளியீடு : முதலிடத்தில் ஆர்ஜன்டினா

பிபா கால்பந்து தரவரிசை வெளியீடு : முதலிடத்தில் ஆர்ஜன்டினா

உலகின் மிகப்பெரிய கால்பந்து கூட்டமைப்பான பிபா அணிகளுக்கான உலகத் தரவரிசையை வெளியிட்டுள்ளது. ஆர்ஜன்டினா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

ஜெர்மனி 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரேசில் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெல்ஜியம் 2-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

கொலம்பியா, சிலி, பிரான்ஸ், போர்த்துக்கல், உருகுவே மற்றும் ஸ்பெயின் முறையே 5-வது இடத்தில் இருந்து 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.இதில், இந்தியா 11 இடங்கள் முன்னேறி 137-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் சிறந்த தரவரிசை இதுவாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]