மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
வேகக்கட்டுப்பாட்டை மீறினால் 5000 அபராதம்

அதிவேக நெடுஞ்சாலை;

வேகக்கட்டுப்பாட்டை மீறினால் 5000 அபராதம்

அதிவேக நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளுக்கு 5000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவே நெடுஞ்சாலைகளில் வேகக்கட்டுப்பாட்டை மீறி செலுத்தப்படும் பஸ்களுக்கு தற்பொழுது ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுகின்றது.

இந்த அபராதத் தொகையை

ஐயாயிரம் ரூபாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் தற்போது கண்காணிக்கப்படுவதனை விடவும் எதிர்காலத்தில் தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்தசில தினங்களில் வேகக்கட்டுப்பாட்டை மீறிய 30 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக போக்குவரத்து ஆணைக்குழுவின் எம்.ஏ.ஜீ.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துக்களை தடுப்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அதிகமான சாரதிகள் வேகக்கட்டுப்பாட்டை கருத்திற்கொள்ளாது மிகவும் வேகமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனத்தை செலுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]