வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 

இணைந்த வடக்கு, கிழக்கில் இறைமையுள்ள சுயாட்சி

'எழுக தமிழ்' மக்கள் பேரணியில் பிரகடனம்யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

போதைப்பொருளைப் பயன்படுத்தி திட்டமிட்ட சீரழிவை நிறுத்த வேண்டும் இணைந்த வடக்கு, கிழக்கின் தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய அடிப்படையில் ஒரு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என நேற்று யாழ் நகரில் நடைபெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் எந்தத் தீர்வையும் ஏற்கப்போவதில்லை என்றும் புதிய அரசியல் யாப்பில் தமிழர்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 68 ஆண்டுகால அனுபவத்தின் ஊடாக ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வொன்று எந்த வடிவத்திலும் சாத்தியமில்லை என்றும் நேற்றைய பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தௌிவில்லாத அரைகுறை தீர்வொன்றை ஏற்றுக்ெகாள்ள முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவரம்»

நவராத்திரி விழா

எதிர்வரும் அக்டோபர் மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை நவராத்திரி விரதம் ஆரம்பமாகிறது. முதலாம் திகதி முதல் 04ஆம் திகதி வரை முதல் நான்கு நாட்கள் துர்க்கா தேவிக்கும் 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை லக்ஷ்மி தேவிக்கும் இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதி தேவிக்கும் பூஜை வழிபாடு நடத்தப்படும். 11ஆம் திகதி விஜயதசமியன்று மானம்பூத்திருவிழா எனும் வாழை வெட்டு நிகழ்வு இடம்பெறும்.

Other links_________________________

தமிழர்கள் வந்தேறு குடிகள் என நிரூபித்தால் கோரிக்ைகயைக் கைவிடத் தயார்

தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் என வரலாறு ரீதியாக உறுதிப்படுத்தினால் வடகிழக்கு இணைப்பு கோரிக்கையினை கைவிடுகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்ேனஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற “எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார். தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும்எமது அரசியல் ரீதியான எதிர்பார்ப்புக்களை உலகறிய விளம்புவதற்கு இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி

விவரம்»

ஜனாதிபதி தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார். தாய்லாந்தில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காவே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தனது விஜயத்தின் போது தாய்லாந்து அரசாங்கத்தின் தலைவர்களுடன் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

விவரம்»

அமரர் பண்டாரநாயக்கா நினைவு தினம் நாளை

மாகாணங்களை நிருவகிக்கும் பொறுப்பு, நிருவகிக்கும் அதிகாரம், மாகாணத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும். இந்திய நாட்டின் அதிகார அலகுகளின் ஆளுநர்கள் போலவே இங்கும் ஆளுநர்கள் ஆளுநர்களாகவே இருக்க வேண்டும். ஆள்பவர்களாக மாறிவிடக்கூடாது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

விவரம்»

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.