வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
பரீட்சை நிலையங்களுக்கு பெற்றோர் செல்லத் தடை

இன்று புலமைப்பரிசில்

பரீட்சை நிலையங்களுக்கு பெற்றோர் செல்லத் தடை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. பரீட்சை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும். மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தமது பரீட்சை சுட்டெண்ணை சீருடையின் இடது பக்கத்தில் குறித்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர் மாணவர்களை உரிய நேரத்தில் பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து வருவதுடன், பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்குள் உள்நுழைவதற்கு பெற்றோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.ெபற்றோரோ பாதுகாவலரோ பரீட்சை நடைபெறும் வேளையில் பரீட்சை மண்டப வளாகத்திற்குள் எக்காரணத்தைக்ெகாண்டும் செல்ல முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி எவரும் பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை என்பதுடன், பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களைக் கைதுசெய்யும் படி பரீட்சைகள் திணைக்களம் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 2959 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறுகின்றது.

350,701 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, இதில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையவர்கள் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. முறைப்பாடுகள் இருப்பின் 1911 என்ற அவசர இலக்கத்திற்கோ அல்லது 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கோ அறிவிக்க முடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.