மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
வடமாகாண முதலீட்டாளர்கள் மாநாடு நாளை:

வடமாகாண முதலீட்டாளர்கள் மாநாடு நாளை:

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு

யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினைக் மேம்படுத்தல், அவர்களது வருமான மூலத்தினை அதிகரிப்பதற்கான ஆதரவினை வழங்கல், வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்பல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தல் என்பனவற்றினை நோக்காகக் கொண்டு, வடமாகாண முதலீட்டாளர்கள் மாநாடு யாழ்ப்பாண அரச அதிபர் அலுவலகத்தில் நாளை நடைபெறுகின்றது.

புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் நல்லூர் உற்சவ காலத்தில் இம்மாநாடானது ஓழங்கு செய்யப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த பொருத்தமான காலமாக இது அமைகின்றது என்றுவடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார். பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், கே.கே.எஸ்.சீமெந்து ஆலை, திக்கம் வடிசாலை ஆகியவற்றை மீள இயங்கச்செய்ய நடவடிக்ைக எடுக்கப்படுமெனவும் இதன்மூலம் ஏராளமான தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கில் வருடாந்தம் அதிக சூரிய ஒளியைக்ெகாண்ட சீதோஷ்ண நிலையையுடனான காலநிலை நிலவுவதால், சூரிய மின்னுற்பத்தியை ​மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜெயசூரிய, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் மஹிந்த ஜினசேன, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த ஆகியோர் இம்மாநாட்டில் உரையாற்றுவர்.

இம்மாநாட்டில் வெளிநாட்டின் 150 பாரிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வர். அச்சுவேலி முதலீட்டு வலயத்துக்கான முதலீட்டு வசதிகள், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பிற்கிணங்க 35 சிறிய அளவிலான கம்பனிகளை மீள உருவாக்குவது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

வடக்கில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஏனைய துறைகளாக, சூரிய மற்றும் காற்றாலை சக்தி மூலங்கள், நன்னீர் மீன்பிடி, உயர்கல்வி, உல்லாசப் பயணத்துறை, மர முந்திரிகை உற்பத்தி, என்பன இனம்காணப்பட்டுள்ளன.

வடக்கில் முதலிடத் திட்டமிடப்பட்டவற்றுள் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள 1054 அறைகள் கொண்ட ஹோட்டல் திட்டமானது 38,000 பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]