மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
சிலப்பதிகார நாடகங்களும் வில்லுப் பாட்டுகளும்

சிலப்பதிகார நாடகங்களும் வில்லுப் பாட்டுகளும்

 பத்தினித் தெய்வம் என்ற தலைப்பில் ஓர் அருமையான நூல் வெளி வந்திருக்கிறது 100 பக்கங்களில் தமிழ் காப்பிய நூல்களில் ஒன்றான இளங்கோ அடிகளாரின் சிலப்பதிகாரத்தின் முக்கிய கட்டங்களை நான்கு சிறு நாடகங்களாக தந்திருகிக்கிறார் மரியாதைக்கு உரிய கல்விமான் கலாபூஷணம், சைவப் புலவர் சு செல்லத்துரை. இருநூறு ரூபாய்க்கு அழகுதமிழில் அக்காவியத்தின் நெஞ்சை அள்ளும் பகுதிகளை உள்ளடக்கியும் தனது நாடக வடிவப் பரிச்சயத்தையும் வெளிப்படுத்தி காட்டுகிறார் ஆசிரியர்.

குறிப்பாகத் தற்கால இளைஞர்களும் யுவதிகளும் எளிதில் விளங்கிக் கொள்ள நாடகமாகவும், வில்லுப் பாட்டாகவும் தந்து தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம் வெளியிட்டுள்ளது. அவருடைய துணைவியார் சிவகாமசுந்தரி நினைவாக இந்த 6 ஆவது நூல் கிடைக்கிறது

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சிலவும் இரு கவிதைகளும் வாசகர்களுக்கு சிலப்பதிகாரம் தொடர்பான முக்கிய அம்சங்களை விபரிப்பதனால் அவற்றை மீள் பதிவுசெய்தல் பொருத்தமுடையது.

நூலாசிரியர் தமது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

* முத்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் மூன்று மூன்றாக மலர்ந்து மணம் பரப்பி விரியும் தனித்துவமும் சிறப்பும் நயதற்குரியன.

* இயல், இசை,நாடகம் எனும் முத்தமிழுக்கே உரிய சிறப்பான இக்காவியம் உருவாகக் கால்கோள் இடடவர்கள் மூவர். அவர்கள் சேரன் செங்குட்டுவன், இளங்கோ, புலவர் சாத்தனார் எனும்மூவர்.

* குறிக்கோள்கள் மூன்று: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதும் என மூன்று.

* நூலின் மங்கள வாழ்த்தில் இடம்பெற்ற இயற்கைக் கூறுகள் திங்களைப் போற்றுதும், மாமலை போற்றுதும் என மூன்று

* கதைநிகழ் நாடுகள் சோழநாடு, பாண்டியநாடு, சேர நாடு என மூன்று,

* காப்பிய நாயல்கிகள் கண்ணகி, மாதவி, கோப்பெரும் தேவி என மூவர்.

* கதையில் வரும் பெருஞ் சமயங்கள், சைவம், வைணவம், சமணம் என மூன்று.

* காப்பிரைட் கதைகள்கூறும் காண்டங்கள் புகார் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் கண்டம் என மூன்று.

* கதைசொல்லக் கையாண்ட மொழி நடைகள்: உரைநடை, பாட்டு, செய்யுள் என மூன்று


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]