வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 

வடமாகாண முதலீட்டாளர்கள் மாநாடு நாளை:

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு

யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினைக் மேம்படுத்தல், அவர்களது வருமான மூலத்தினை அதிகரிப்பதற்கான ஆதரவினை வழங்கல், வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்பல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தல் என்பனவற்றினை நோக்காகக் கொண்டு, வடமாகாண முதலீட்டாளர்கள் மாநாடு யாழ்ப்பாண அரச அதிபர் அலுவலகத்தில் நாளை நடைபெறுகின்றது. புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் நல்லூர் உற்சவ காலத்தில் இம்மாநாடானது ஓழங்கு செய்யப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த பொருத்தமான காலமாக இது அமைகின்றது என்றுவடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார். பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், கே.கே.எஸ்.சீமெந்து ஆலை, திக்கம் வடிசாலை ஆகியவற்றை மீள இயங்கச்செய்ய நடவடிக்ைக எடுக்கப்படுமெனவும் இதன்மூலம் ஏராளமான தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கில் வருடாந்தம் அதிக சூரிய ஒளியைக்ெகாண்ட சீதோஷ்ண நிலையையுடனான காலநிலை நிலவுவதால், சூரிய மின்னுற்பத்தியை ​மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

விவரம்»

நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தி


நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி விழா மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் முதலானோர் மேடையில் காணப்படுகின்றனர். (சுதத் மலவீர)

Other links_________________________

ஒரு சுற்று அமர்வில் தீர்வு காணக்கூடிய விடயம் இத்தனை வருடங்கள் இழுத்தடிப்பு

மீனவர் பிரச்சினை நீண்டு செல்வதற்கு இரு நாட்டு தலைவர்களுமே பொறுப்பு

இதுவும் தமிழர் சம்பந்தப்பட்டது என்பதால் இழுத்தடிப்போ எனச் சந்தேகமாம்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையானது தீர்வு காணப்படாது பல வருடகாலமத் தொடர்வதற்கு இரு நாட்டினது அரசாங்கங்களுமே பொறுப்பேற்க வேண்டும். இரு நாடுகளினதும் தலைவர்கள் பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை இத்தனை வருட காலமாக இழுத்தடிப்புச் செய்து வருவது ஏன் என்று புரியவில்லை. இரு நாட்டு தலைவர்களும் நினைத்தால் ஒரு வார காலத்தில் இப்பிரச்சினைக்குத் தீர்வினைக் கண்டுவிடலாம்.

விவரம்»

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதிருப்த

யாழ்ப்பாணத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மநாநாட்டினை நடத்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து வட மாகாண முதலமைச்சர் தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு எப்போதும் வடமாகாண முதலமைச்சரையும் அமைச்சர்களையும் புறக்கணித்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதென்று அவர் கூறியுள்ளார்.

விவரம்»

இன்று புலமைப்பரிசில்

பரீட்சை நிலையங்களுக்கு பெற்றோர் செல்லத் தட

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. பரீட்சை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும். மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவரம்»

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.