மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
முஸ்லிம் அரசியவாதிகளால் யாழ் முஸ்லிம்கள் புறக்கணிப்பு

முஸ்லிம் அரசியவாதிகளால் யாழ் முஸ்லிம்கள் புறக்கணிப்பு

* கொழும்பில் நடைபெற்ற சவால்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடலில் கண்டன குரல்கள்

யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் தற்போது எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்றினை யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் சம்மேளம் ஏற்பாடு செய்திருந்தது. சம்மேளனத்தின் தலைவர் ஏ.எச்.ஜமால் முஹைடீன் மற்றும் அதன் செயலாளர் ஆர்.கே. சுவர்கஹான் ஆகியோர் தலைமையில் கொழும்பு தெமடகொட ஜமாதே இஸ்லாமி மண்டபத்தில் நடைபெற்றது.

* இந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள். பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்

ஆவணங்கள் இல்லாவிட்டால் யாழ் மாவட்ட முஸ்லிம்களின் நிலைமைகள் மழுங்கடிக்கச் செய்யப்படலாம். எனவே முழுமையான ஆவணம் ஒன்றை ஆதாரமாகக் கொண்டு நாம் நமது தேவைகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண் டும். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக் கூடாது என்றார்.

இன்று எல்லாத் தேசியவாதமும் அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருப்பதனால், மீள் குடியேற்ற மக்கள் புறக்கணிக்கப்படு கின்றனர். யாழ் மாவட்ட முஸ்லிம்களின் உடமைகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. 50 சத வீதம் விற்கப்பட்டுள் ளது, 30 தொடக்கம் 40 சத வீதம் வரை சிதைவடைந்தும், அழிந்தும் போய் உள் ளது, 20 சத வீதமுள்ளதால் யாருக்கு அது பயன் தரும்.

இந்த வகையில் இந்த 20 சத வீதத்திலிருந்தாவது இழக்கப்பட்டவைகளை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அதற் கான பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. பல குடும்பங் கள் மீளக் குடியமர்ந்தும் அது உரிய பயன்களை கொடுக்கவில்லை. அவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்கள் இல்லை. எனவே அரச மட்டத்தில் முயற் சித்தால் அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்.

யாழ் நகரப் பகுதியில் முஸ்லிம்களுக் குச் சொந்தமான சுமார் 400 வர்த்தக நிலையங்கள் இருந்தன. பல வீடமைப்புத் திட்டங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாது மறுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் யாழ் மாவட்ட முஸ்லிம்களின் குறிப்பாக நகரத்தின் ஒரு திட்ட வரைவை ஒரு மாத காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். அதன் மூலம் அரசாங்கத்திற்கு அதனை சமாப்பித்து யாழ் முஸ் லிம்களை கட்டியெழுப்ப வேண்டும்.

* இடம் பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்களின் அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. முபீன்

வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு இனச் சுத்திகரிப்பாகும். ஆரம்பத்தில் இனச்சுத்திகரிப்பு என்று ஏற்றுக் கொள்ளாத தமிழ் தேசியக் கூட் டமைப்பு தற்போது அதனை இனச் சுத்தி கரிப்பு என்று ஏற்றுக் கொண்டுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் வீடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த மறைந்த தலைவர் சிவசிதம்பரம் வடமாகாண முஸ்லிம்கள் விரட்டப்பட் டதை எதிர்த்தார். முஸ்லிம்கள் மீளக் குடியேற்றப்படாதவரை தான் யாழ்ப் பாணம் செல்லப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்த அவர், வடமாகாணம் செல்லாமலேயே மரணித்துவிட்டார்.

முஸ்லிம்களின் வெளியேற்றம் சர்வதேசப்படுத்தப்பட வேண்டும். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த சமந்தா பவர் 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை ஒரு இனச் சுத்திகரிப்பு எனத் தெரிவித்தார். தற்போது பேராசிரியர் ஹஸ்புல்லா யாழ் முஸ் லிம்களின் இழப்புக்கள், அதன் பாதிப்புக்கள், தாக்கங்கள் தொடர்பான முழு விபரங்களுடன் கூடிய ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் இது தொடர்பாக ஒரு புத்தகத்தையும் அவர் வெளியிடவுள்ளமையும் மிகவும் பயனுள்ளதாகும்.

1990ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப் பாணத்தில் முழு விடயங்களும் குறிப்பாக வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தீர்மானிக்கும் சக்திகளாக முஸ்லிம்கள் காணப்பட்டனர். யுத்தம் அதனை மாற்றி விட்டது. மீண்டும் அந்த நிலைமைகள் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாதென்ற நிலையில் ஒரு சில தமிழ் தலைமைகள் இருப்பதாகவும் கவலை தெரி வித்தார் முபீன்.

மேற்படி நிலைமைகளை நாம் வென்றெடுக்க வேண்டும். அக்கறையின்றி இருக்கும் முஸ்லிம் கட்சிகள் தமது பேதங்களை மறந்து ஒன்றுபட்டு யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அதீத அக்கறை செலுத்த வேண்டும். கடந்த வருடம் பருத்தித்துறை பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்ய முயற்சித்தபோது ஒருசிலர் எதிர்த்ததாகவும் அதனை நாம் எதிர்த்து புனர்நிர்மாணம் செய்து, கடந்த வாரம் திறந்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விட யங்களை அனுபவ ரீதியாக அறிந்து நம்மை மாற்றிக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

* சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர். சுவர்ஹகான்

வீடமைப்பு விண்ணப்பங்கள் பெருமளவு நிராகரிக்கப்படுகின்றன. குறிப்பாக 317 விண்ணப்பங்களில் 26 ஐ மட்டுமே பிரதேசச் செயலாளர் ஏற்றுக் கொண்டார். மெனிக்பாம் மக்களை மீள்குடியேற்றி வழங்கிய உதவிகள் போன்று முஸ்லிம் களுக்கு இல்லை. 1981ஆம் ஆண்டு வழங்கிய இடங்களைக் கூட தற்போது வயல்காணி என்று கூறி புறக்கணிப்புச் செய்யப்படுகின்றது. தமிழ் மக்கள் வீடு கள் கட்டினால் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. முஸ்லிம்கள் கட்டினால் அதனை நேரடியாகவே தடுக்கின்றனர்.

பிரதேச செயலாளர் ஊடாக முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டம் மேற் கொள்ளப்படுமானால் அது இடம்பெறாது. இவ்வாறு செய்வதன் மூலம் அவர் கள் முஸ்லிம்களை முடக்குகின்றனர்.

* சுங்க அதிகாரி லுக்மான்

இம்மக்களின் பிரச்சினைகள் சொல்லிலடங்காதது. இவர்களின் அனைத்து விடயங்களிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அரசியலில் இவர்கள் செல்வாக்கில்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே, யாழில் ஒரு ஸகாத் பவுண்டேசன் உருவாக்கப்பட்டு அதன் மூலம் மீளக் குடியமரும் ஏழைகளுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது சிறப்பாகும்.

அதன் மூலம், காணிகள் இல்லாத மக்களுக்கு குறைந்த பட்சம் பத்துப் பேர்ச்சஸ் காணிகளையாவது கொள்வனவு செய்து வழங்க முடியும். மன்னார் எருக்கலம்பிட்டியில் இவ்வாறான திட்டங்களைத்தான் நாங்கள் செயற்படுத்தினோம். இத்திட்டத்தின் மூலம் பல ஏழைக் குடும்பங்கள் நன்மையடைந்தார்கள்.

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், அரசு வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் முட் டுக்கட்டைகள் போடும் அரசியல் சக்திகளை கட்டுப்படுத்துவதுடன் அரச நிர்வாக விடயத்தில் இனவாதம் காட்டும் அரச அதிகாரிகளை உடன் மாற்றி நியாயமாக செயற்படக் கூடிய அரச அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

இந்நிகழ்வில் தேசிய ஷூறா சபை, அகில இலங்கை ஜமியதுல் உலமா அங்கத்தவர்கள், அக்குறனை ஜமியதுல் உலமா அங்கத்தவர்கள், வடமாகாணத் தின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள், வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஆர்வமுள்ளவர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

* எம்.எஸ். தமீம்

யாழ் முஸ்லிம்களை மேலோங்கச் செய்ய வேண்டும். புத்தளத்தில் இருக்கும் வடமாகாண முஸ்லிம்களுக்கும் வீடமைப்புத் திட்டத்துடன் கூடிய உதவிகள் செய்ய வேண்டியுள்ளது. அடிக்கடி போய் வருபவர்களை நிரந்தரமாக குடியமர்த்த வேண்டும். எமது ஆய்வில் யாழ்ப்பாணத்தில் 45 தொடக்கம் 50 சத வீதமான வீடுகள் இழக்கப்பட் டுள்ளது.

* எம்.எச்.எம். சினாஸ்

யாழில் அங்காடி வியாபாரக் குடும்பங்கள் தற்போது சுமார் 200 பேர் வரை உள்ளனர். அவர்களுக்கும் வீடமைப்புத் திட்டம் வேண்டும். பிரதேசச் செயலாளர் முஸ்லிம்கள் விடயத்தில் அப்பட்டமான பொய்யான கருத்துக்களை தெரிவிக்கின்றார். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அதீத அக்கறை செலுத்த வேண் டும்.

* ஊடகவியலாளர் முஜிபுர் ரஹ்மான்

யாழ் மூர்வீதி மக்களில் அதிகமானவர்கள் வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களில் வசதியாக வாழ்கிறார்கள். முதலில் அவர்கள் தங்களது இடங்களுக்கு மீள்குடியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு தமது வர்த்தகம் மற்றும் ஏனைய விடயங்களை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் யாழ் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும்.

 தற்போது வறியவர்களே யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் குடியிருப்புப் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. அவைகளைத் தீர்ப்ப தற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்கள் முன்வர வேண்டும்.

* சரபுல் அனாம்

சோனகத் தெருவில் 1990 இல் 3000 குடும்பங்கள் இருந்தன. தற்போது அது 7000 ஐயும் தாண்டியுள்ளது. இந்தவேளையில் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் முஸ்லிம் சமூகம் மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும்.

* தேசிய ஷூறா சபை உறுப்பினர் றிஷா எஹியா

இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் ஆவணப்படுத்தல் சிங்கள மொழியிலும் வெளியிடப் படவேண்டும். அந்த மக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

* ஜம்சித்

உடமைகளின் இழப்புக்களுக்கும், தொழிலாளிகளின் தொழில் இழப்பீடுகளுக்கும் சரியான முறையில் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நிபந்தனைகள் அற்றவகையில் இடம்பெற வேண்டும். காணி இல்லாத இடங்களில் தொடர்மாடி வீடுகளையாவது அமைத்து அவர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

* ஊடகவியலாளர் ஜாவித்

யாழ் மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் அங் குள்ள ஊடகங்களால் புறக்கணிப்புச் செய்யப்படுவதையும், அங்குள்ள அரச அதிகாரிகள் முஸ்லிம்கள் விடயத்தில் காட்டும் புறக்கணிப்புக்களை அவர்கள் வெளியிடாது மறைக்கப்படுவதுமாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு யாழில் ஒரு முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி கொழும்பில் உள்ள ஊடகங்களுக்கு அச்செய்திகளை உடனுக்குடன் அனுப்பி செய்திகளை பிரசுரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

யாழில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு ஏதாவது ஒரு நிறுவனங்கள் மூலம் உதவிகளை வழங்கி ஊடகச் செயற்பாடுகளை முன்னெடுக்க இவ் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* நியாஸ்

யாழ் முஸ்லிம்கள் பலமில்லாத அரசியலில் இருக்கின்றோம். வழி நடத்த யாரும் இல்லை. யாழின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும். அரசால் புறக்கணிக்கப்பட்டாலும் எமது வளங்களை உரிய முறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். கணக்கெடுப்பின்படி 70 சத வீதமானவர் களுக்கு வீடுகளில்லை.

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்காக வேண்டி எம்.எப்.சி.டி. என்ற நிறுவனம் வீட்டுத் திட்டம் ஒன்றை ஆரம்பித்தது. அத்திட்டம் சில அரச மற்றும் நிருவாகிகளின் செயற்பாட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சீரமைக்கப்பட்டிருக்கும்.

* ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதி

ஒற்றுமை, விட்டுக் கொடுப்புக்கள் தேவையாகவுள்ளது, அனைவரும் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும். அதன் மூலமே வெற்றியை அடைந்து கொள்ளலாம்.

ஜமியதுல் உலமாவின் யாழ் மாவட்ட தலைவர் மௌலவி அஸீஸ்

மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும். வீடுகளைத் திருத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

* றிஸ்னி

ஒரு வீட்டில் வாழ்ந்தவர்கள் இன்று பல குடும்பங்களாக வாழ்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு அவர்கள் இருந்த இடத்தில் மாடி வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண் டும். காணிகள் அனைத்துக்கும் வரை படம் தயாரித்து அடையாளம் இடப்பட வேண்டும்.

மூர்வீதி மக்களின் தடயங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]