மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
அழகான புருவங்களுக்கு

அழகான புருவங்களுக்கு

* புருவங்களை ரொம்பவும் கீழ் நோக்கி வளைத்து ஷேப் செய்யக் கூடாது. லேசாக மேல் நோக்கி வளைந்திருக்கும்படி செய்தால் பார்க்க இளமையான தோற்றம் கிடைக்கும்.

* நீளமான முகத்திற்கு புருவங்களை கண்களுக்கு சற்று வெளியே இருக்கும்படி பார்த்து ஷேப் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பார்க்க அழகாக இருக்கும்.

* சாதாரண முகத்திற்கு சாதாரண அளவில் ஷேப் செய்யலாம்.

* சிறிய முகத்திற்கு புருவங்கள் ரொம்பவும் நீளமாக இருக்க கூடாது.

சில எளிய ஆலோசனைகள்:

* எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது.

* தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.

* புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஒலிவ் எண்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.

* எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த இடங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]