மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
கருமை நிறம் மறைய...

கருமை நிறம் மறைய...

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். மேலும், கழுத்துப் பகுதியும் கருமையாக மாறிவிடும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளிபடும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது.

குழந்தை பிறந்ததும், இவை மறைந்துவிடும். இருந்தாலும் இன்றைய பெண்கள், சிலர் பியுட்பாடி பார்லர்களில் லேசர் சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இது தாய் சேய் உடல் நலனை பாதிக்கும் தன்மை கொண்டது.

இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும் பாசிப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதை தேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்.

மென்மையான ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது 'மசாஜ்' செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதடுகள் படிப்படியாக சிவப்பாக மாறும்


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]