புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 

பெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்

பெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்

பெண்களின் அடிவயிற்றில் கர்ப்பப்பை அமைந்துள்ளது. இக்கருப்பையில் தோன்றும் தசைநார்க் கட்டிகள் பைபுரோயிட்டுகள் (Fibroids) என அழைக்கப்படுகின்றன.

கர்ப்பப்பைக் கட்டிகள் தோன்றுவதற்கான காரணம் பெண்ணின் தனிப்பட்ட பரம்பரை இயல்பாகும். ஆனால் இக்கட்டிகள் மேலும் வளர்வதற்கு உதவும் காரணி பெண்களின் சூலகங்களால் சுரக்கப்படும் ஈஸ்ரோஜன் (estrogen) எனப்படும் ஹோர்மோனே ஆகும்.

அதனாலேயே பெண்கள் மெனோபோஸ் பருவத்தை அடைந்த பின்னர் இந்த ஹோர்மோன் இல்லாமற் போவதனால் இக்கட்டிகள் மேலும் வளராது அளவில் குறைந்து கொண்டே போகும். அத்துடன், பெண்களில் மெனோபோஸ் பருவத்தின் பின்னர் இவ்வாறான பைபுரோயிட் கட்டிகள் தோன்றுவதில்லை.

இவ்வாறான பைபுரோயிட் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகள் இல்லை. இவை தசைக்கட்டிகளே மிக அருமையாக இவற்றில் புற்றுநோய் மாற்றங்கள் ஏற்படலாம்.

எனினும் பெண்கள் மத்தியில் இவ்வாறான கட்டி ஒன்று தமக்கு இருக்கின்றதென அறிந்தவுடனேயே அவர்கள் மனதில் இது தொடர்பான பயமும் சந்தேகமும் தோன்ற ஆரம்பிக்கின்றன.

ஆனால் நடுத்தர வயதுடைய பெண்களில் இது ஒரு பொதுவான பிரச்சினை என்பதும் கூடுதலான பெண்களில் இவ்வகை கட்டிகள் காணப்படும் என்பதும் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய விடயம்.

பைபுரோயிட் கட்டிகள் பல்வேறு எண்ணிக்கையில் தோன்றலாம். சிலரில் ஒரு கட்டியும் காணப்படலாம். சிலவேளைகளில் ஒருவரிலேயே பல கட்டிகளும் காணப்படலாம். சில சந்தர்ப்பங்களில் ஒருவரிலேயே 30 40 கட்டிகள் காணப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

பெரும்பாலான பெண்களில் இக்கட்டிகள் எந்த நோய் அறிகுறிகளையும் தோற்றுவிப்பதில்லை. கூடுதலானவர்களில் இக்கட்டிகள் உள்ளது அவர்களுக்கே தெரிவதில்லை. ஆனால் இக்கட்டிகள் பெரிதாக உள்ளபோதோ அல்லது கர்ப்பப்பையின் உட்புறத்தே உள்ளபோதோ நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும்.

அதிகப்படியான மாதவிடாய்ப்போக்கு இதனால் இரத்தச்சோகை, தளர்ச்சி, உடல் அலுப்பு, வயிற்றுவலி, இளம் பெண்களில் குழந்தைப் பாக்கியம் தாமதமடைதல், கட்டிகள் அருகிலுள்ள உறுப்புகளை அமுக்கும்போது வயிற்றினுள் அசௌகரியம், பாரமான உணர்வு, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் தோன்றலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.