புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

ஜோதிடம்
மேஷம்

அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு மிகவும் சந்தோஷமான வாரம். பரணி நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் கவனிக்கவும். கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு கணவனுக்கோ, மனைவிக்கோ மருத்துவ செலவு ஏற்படலாம்.

பெண்கள் - உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டு. குடும்பத்தில் அமைதி உண்டு. கணவன் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுங்கள். பெற்றோர்கள் ஆதரவாய் இருப்பார்கள்.

உத்தியோகம் - புது வேலை மாற்றம் சிலருக்கு மனதிற்கு நிம்மதி இருக்காது. வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தரும். அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்கத்தால் உதவி கிடைக்கும்.

தொழில் - புது தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடலாம். கடன் முயற்சியில் வெற்றி உண்டு. தனியார் தொழில் மற்றும் கூட்டுத் தொழிலில் இலாபம் உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

பரிகாரம் - சனிக்கிழமை 9 நல்லெண்ணை தீபம் ஏற்றவும் சனீஸ்வரனுக்கு, புதன்கிழமை வில்வ அர்ச்சனை செய்யவும் ஈஸ்வரனுக்கு.

ரிஷபம்

கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ரோகினி நட்சத்திரகாரர்கள் தங்களது உடமைகளை பாதுகாக்கவும். வெளியூர் பிரயாணம் செய்வோர் எச்சரிக்கையுடன் இருக்கவும். மிருகஷீரிடம் நட்சத்திரகாரர்கள் எந்த வித கவலையும் வேண்டாம். இனிதான வாரம்.

பெண்கள் - சகோதர, சகோதரிகளின் பலம் ஓங்கும். மருத்துவ செலவு குறையும். யாரிடத்திலும் வாக்கு வாதம் வேண்டாம். தவிர்க்கவும். சிலருக்கு பொன், பொருள் சேரும் காலம்.

உத்தியோகம் - மேல் அதிகாரிகளின் ஆதரவு கூடும். யாதொருவரிடமும் கடன் பெறுதலை தவிர்க்கவும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்கள் தங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

தொழில் - பங்கு வர்த்தகம் எதிர்பார்த்த லாபம் தரும். புதிதாக தொடங்கும் தொழிலில் தடைகள் வரலாம். இருந்தபோதிலும் மனதில் திருப்தி இருக்கும். புதிய நட்புடன் தொழில் வேண்டாம்.

பரிகாரம் - சிவனுக்கு திங்கட்கிழமை 2 நெய் தீபம் ஏற்றவும். புதன் அன்று கிருஷ்ணருக்கு துளசி அர்ச்சனை செய்யவும்.

மிதுனம்

மிருகஷீரிடம் நட்சத்திரகாரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு எண்ணிய எண்ணம் நிறைவேறும். புனர்பூசம் நட்சத்திரகாரர்களுக்கு எந்த ஒரு சலனமும் வேண்டாம். இனிமையான வாரம்.

பெண்கள் - உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். பிறந்த வீட்டிலிருந்து உங்களுக்கு ஆதரவு உண்டு. யாதொரு கவலையும் வேண்டாம்.

தொழில் - ஏற்கனவே செய்கின்ற தொழில் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புது தொழில் இரண்டுமே நன்றாக இருக்கும். இதுவரையிருந்த கடன் தொல்லை இனிமேல் இல்லை.

உத்தியோகம் - வேலைமாற்றம், புதிதாக தேடிகொண்டிருப்பவர் ஆகியோருக்கு நல்லகாலம் என்று சொல்லலாம். சக ஊழியர்களுடன் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பிரயாணம் செய்பவர்கள் உடமைகளை பாதுகாத்து கொள்ளவும்.

பரிகாரம் - செவ்வாய்க் கிழமை முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யவும். மாதுளம் பழம் தானம் செய்தால் நல்லது. ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றவும்.

கடகம்

புனர்பூசம் நட்சத்திரகாரர்களுக்கு நல்லதொரு காலம். பூசம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக தேறும். ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு தெய்வீக பணியில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம். சிலருக்கு வெளியூர் யாத்திரை தவிர்க்க முடியாது.

பெண்கள் - குடும்பம், கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியோரது நலம் நன்றாக இருக்கும். ஆயில்ய நட்சத்திரகாரர்களுக்கு குடும்பத்தில் சகோதர, சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை வரும். உறவினர்களின் வருகை அதிகரிக்கும்.

உத்தியோகம் - அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமாற்றம் உண்டு அல்லது இடமாற்றம் அமையலாம். தனியார் பணியில் இருப்பவர்களுக்கு நல்லகாலம் இது. உங்களுடைய மதிப்பும், மரியாதையும் ஓங்கும்.

தொழில் - யாதொரு காரியம் செய்யும் முன்னும் ஒரு தடவைக்கு இருதடவை யோசிக்கவும். நல்லதொரு காலம் இது. தங்களுடைய கடன் சுமை குறையும்.

பரிகாரம் - விநாயகருக்கு சனிக்கிழமை அருகம்புல் மாலை அணிவிக்கவும். 12 நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

சிம்மம்

இந்த ராசியில் இருக்கும் மகம் நட்சத்திரகாரர்களுக்கு, உறவினர்களால் தொல்லை ஏற்படும். பூரம் நட்சத்திரகாரர்களுக்கு தகப்பனுடன் வாக்கு வாதம் ஏற்படலாம். உத்ரம் நட்சத்திரகாரர்களுக்கு உடலுக்கு ஏதாவது மருத்துவ செலவு உண்டு.

பெண்கள் - சில பெண்களுக்கு நீண்டநாட்களாக இருந்து வந்து உடல் ஆரோக்கிய சம்பந்தமான விஷயங்கள் நல்ல முடிவிற்கு வரும். சிலருக்கு கண் சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படலாம். சிலருக்கு தெய்வீக பணியில் ஈடுபடும் பாக்கியம் கிடைக்கும்.

உத்தியோகம் - தனியார் பணியில் சிலருக்கு மனதில் ஏமாற்றம் உண்டு. யாதொரு விஷயத்திலும் கவனம் வேண்டும். பணிமாற்றம் தற்போது வேண்டாம். கடன் உதவி எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் வரலாம்.

தொழில் - நன்றாக இருக்கும் இவ்வாரம் வரவு செலவுகளில் கடன் பாக்கி வசூலாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பம் இப்போது வேண்டாம்.

பரிகாரம் - வியாழனன்று குருபகவானுக்கு 3 நெய் விளக்கேற்றவும்.

கன்னி

ஹஸ்தம் நட்சத்திரகாரர்களுக்கு புதிய நட்பு உண்டாகும். சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு, எந்த விதமான புதிய முயற்சியும் வேண்டாம். உத்ரம் நட்சத்திரகாரர்களுக்கு எந்த வித கவலையும் இன்றி சந்தோஷமான வாரம் இது.

பெண்கள் - கணவன், மினை உறவு பலப்படும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டு. கடன் சுமை குறையும் சிலருக்கு வீடு வாங்கவோ, விற்கவோ கூடும். தாய் வீடு சாதகமாக உள்ளது. சிலருக்கு தெய்வப் பணியில் ஈடுபடும் யோகம் உண்டு.

தொழில் - புதிய தொழில் முயற்சி கைகூடும். நண்பர்கள் உதவுவார்கள். கடன் சுமை குறையும். எந்த விதமான மனசஞ்சலமும் வேண்டாம். வாரம் முதலில் மனக்குறை இருந்தாலும் வாரமுடிவில் நன்றாகவே இருக்கும்.

உத்தியோகம் - வேலைமாற்றம் மனதிற்கு இதம் தரும். நண்பர்கள் உதவி உண்டு. மேலதிகாரிகளின் உதவி கண்டிப்பாக உண்டு. வெளியூர் பிரயாணங்கள் உங்களுக்கு வெற்றி தரும்.

பரிகாரம் - வெள்ளி, செவ்வாய் ஆகிய இருநாட்களிலும் துர்க்கைக்கு ராகுகால பூஜை செய்வது நல்லது. 9 பேருக்கு அன்னதானம் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

துலாம்

இந்த இராசி நேயர்களுக்கு வாரம் முழுவதும் குதூகலம்தான். உறவினர்கள் வருகை, நண்பர்கள் அறிமுகம் யாவும் மனதிற்கு திருப்தியும், சந்தோஷமும் கொடுக்கும். ஸ்வாதி நட்சத்திரகாரர்களுக்கு பண வரவு உண்டு. சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு மன நிம்மதி தரும். விசாக நட்சத்திரகாரர்களுக்கு அலைச்சல் அதிகமாகும்.

பெண்கள் - புது உறவு, புது நட்பு மனதிற்கு சந்தோஷம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். பணவரவு திருப்தி அளிக்கும். சிலர் தெய்வீக பணியில் ஈடுபடுவார்கள். கடன் தொல்லை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டு.

வியாபாரம் - கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. நீண்டநாட்களாக இருந்து வந்த நட்பு முறையில் விரிசல் வரலாம். அரசாங்க உதவி உண்டு. புது கடன் வேண்டாம்.

உத்தியோகம் - அரசு, தனியார் பணியில் இருப்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சிலருக்கு பணியில் உயர்வு உண்டு. இடமாற்றம் வளர்ச்சி தரும்.

பரிகாரம் - வியாழன் சனிமுறையே ராகு, கேதுவிற்கு 9 தீபம் ஏற்றி வழிபடவும்.

விருச்சிகம்

கேட்டை, அனுஷம் மற்றும் விசாக நட்சத்திரகாரர்களுக்கு இவ்வாரம் சிறப்பான வாரமாகும். இருந்த போதிலும் இவர்களுக்கு சற்று உடல் நலக் குறைவு ஏற்படலாம். சிலருக்கு சரும நோயினால் பாதிப்புகள் வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

பெண்கள் - குடும்ப ஒற்றுமை சிறப்படையும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு பொன், பொருள் ஆபரணங்கள் சேரும். பிறந்த வீட்டால் நன்மை உண்டு.

உத்தியோகம் - சிலருக்கு வேலைமாறும் யோகம் உண்டு. புதிய வேலை மனதிற்கு திருப்தியை தரும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கடன் சுமை குறையும்.

தொழில் - புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பங்கு வர்த்தகம் லாபம் உண்டு. எதிர்பார்த்த நல்லசெய்தி இந்த வாரம் கிடைக்கும். பணபுழக்கம் அதிகரிக்கும். அரச உதவி எதிர்பார்த்தவர்களுக்கு நல்லகாலம் இது.

பரிகாரம் - வினாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்யவும்.

தனுசு

குடும்பத்தில் ஒற்றுமை உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். உடல் ஆரோக்கியம், மன தைரியம் கூடும். எந்த ஒரு புது நட்பையும் நம்ப வேண்டாம். கடன் கொடுப்பது, வாங்குவது இப்போது வேண்டாம். மூலம்- இந்த வாரம் நல்ல செய்தி உண்டு. பூராடம் - குடும்பத்தில் அமைதி நிலவும். உத்ராடம் எந்த ஒரு செயலிலும் எச்சரிக்கை தேவை.

பெண்கள் - கணவன், மனைவி கருத்துவேற்றுமை மாறும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மாற்றம் உண்டு.

உத்தியோகம் - அரசு பணியில் உள்ளவர்களுக்கு வேலைமாற்றம் மனதிற்கு நிறைவாக இருக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்ததுபோல் வரும். கடன் சுமை குறையும்.

வியாபாரம் - வெளிநாட்டு வியாபாரம் நல்லலாபம் தரும். புதியதொழில் தொடக்கம் தள்ளிபோடவும். பங்கு வர்த்தகம் கைகொடுக்கும். அரசு உதவி எதிர்பார்த்ததுபோல் நடக்கும்.

பரிகாரம் - புதன்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சினை செய்யவும்.

மகரம்

அவிட்டம், திருவோணம் மற்றும் உத்ராடம் நட்சத்திரகாரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத நல்ல செய்தி வந்தடையும். நீண்ட நாள் இருந்துவந்த வழக்குகள், சொத்து பிரச்சினை ஆகியவை ஒரு நல்ல முடிவிற்கு வரும். மருத்துவ செலவும் குறையும்.

பெண்கள் - எந்த வித மனக்கவலையும் இன்றி இனிதே இருக்கும். இவ்வாரம் கணவன், குடும்பம், குழந்தைகள் அனைவருமே உங்களை போற்றுவர். வீடு, அலுவலகம் இரண்டுமே திருப்தி தரும் வாரம்.

தொழில் - புது தொழில், கூட்டுத் தொழில் என அனைத்துமே உங்களுக்கு இந்த வாரம் சாதகமாகவே அமையும். கடன் சுமை குறையும். அரசு உதவி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும்.

உத்தியோகம் - வேலை விஷயத்தில் கவனம் வேண்டும். சிலருக்கு பதவி உயர்வு உண்டு. சம்பள உயர்வு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காமல் போகலாம்.

பரிகாரம் - ஞாயிறு அன்று சிவனுக்கு அர்ச்சினை செய்யவும்.

கும்பம்

அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். சதயம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் தேறும், மருத்துவ செலவு குறையும், பூரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு குடும்ப ஒற்றுமை ஓங்கும். இந்த வாரம் கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

பெண்கள் - கணவன், மனைவி உறவு மேம்படும். பிறந்த வீட்டால் பலன் உண்டு. சகோதர, சகோதரி உறவு நன்றாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு கூடும். சிலர், பொதுபணியில் ஈடுபடுவர்.

வியாபாரம் - கூட்டுத் தொழில் சீராக அமையும். எதுவும் ஏற்ற இறக்கம் இல்லை. கடன் தொல்லை தீரும். வியாபாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகம் கைகொடுக்கும் தனியார். தொழிலில் திருப்தி இருக்கும்.

உத்தியோகம் - சீராக இருக்கும். பணியில் எதுவும் மாற்றம் இப்போது வேண்டாம். நண்பர்கள் உங்களுக்கு தகுந்த நேரத்தில் உதவுவார்கள்.

பரிகாரம் - வியாழனன்று குருபகவானுக்கோ அல்லது சிவபிரானுக்கோ 3 நெய்விளக்கேற்றி அர்ச்சினை செய்யவும்.

மீனம்

உத்ரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு சந்தோஷமான வாரம். பூரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு மருத்துவ செலவு உண்டு. ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு மனதில் அமைதி உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தரும்.

பெண்கள் - கணவன் மனைவி அன்பு நீடிக்கும். உறவினர் நண்பர்கள் சகோதர, சகோதரி ஆகியோர் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ செலவு குறையும்.

வியாபாரம் - தொழிலில் லாபம் உண்டு. கூட்டுத் தொழில் நன்றாக இருக்கும். பணபற்றாகுறை இல்லை. கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எண்ணங்கள் நிறைவேறும்.

உத்தியோகம் - அரசு, தனியார் பணியில் மாற்றம் உண்டு. விரும்பிய இடம் கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டு. எந்த ஒரு புதிய முயற்சியும் இப்போது வேண்டாம். வெளிநாடு வேலை வாய்ப்பு சிலருக்கு நன்மை தரும்.

பரிகாரம் - வெள்ளிக்கிழமை மகா லெட்சுமிக்கு 6 நெய்தீபம் ஏற்றி அர்ச்சினை செய்யவும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.