மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03
SUNDAY MARCH 13, 2016

Print

 
தமிழக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை

ஈழத்தமிழருக்கு ஆதரவானவர் நடிகர் போஸ்:

தமிழக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை

ஈழத் தமிழருக்கு ஆதரவாகச் செயற்பட்டுவரும் தென்னிந்திய பிரபல குணச்சித்திர நடிகர் வெங்கட் போஸுக்கு எதிர்வரும் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை தி.மு.க தலைவர் கலைஞர் மு. கருணாநிதி வழங்க வேண்டுமென ஈழத்தமிழர் நலன்சார் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நடைபெறவுள்ள தமிழக சட்ட சபைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகர் வெங்கட் போஸ் கட்சித் தலைமையிடம் விண்ணப்பித்துள்ளார். இவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டுவரும் சமயத்தில் அவருக்கு நிச்சயம் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென இந்த அமைப்புக்கள் வலுவான கோரிக்கையை விடுத்துள்ளன.

நடிகர் வெங்கட் போஸ் ஈழத் தமிழ் உறவுகளுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருபவர். யுத்த காலத்தில்கூட இலங்கை வந்து வடபகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறியவர். இன்றும் அம்மக்களுக்காக உண்மையாகவே இதயசுத்தியுடன் குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவரைப் போன்றவர்களே எதிர்கால தமிழக சட்டசபைக்கு அவசியம் தேவையானவர்கள் எனவும் அந்த அமைப்புக்கள் கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]