மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03
SUNDAY MARCH 13, 2016

Print

 
கலா பொல 2016’ – கலையின் மற்றுமொரு வெற்றிகரமான கொண்டாட்டம்

கலா பொல 2016’ – கலையின் மற்றுமொரு வெற்றிகரமான கொண்டாட்டம்

விற்பனைகள் மூலம் ரூபா 13 மில்லியன் வருமானம்

இலங்கையின் வருடாந்த திறந்தவெளி ஓவிய கண்காட்சியான ‘கலா பொல’ நிகழ்வு, 23ஆவது தடவையாகவும் கொழும்பை வர்ணமயமானதாக மாற்றியமைத்திருந்ததுடன், இலங்கையின் பல்வேறுபட்ட கட்புலக் கலைஞர்களை இது பிரகாசமாக மிளிரச் செய்தது. ஜோர்ஜ் கீற் மன்றம் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘காலபொல 2016’ கண்காட்சியானது, பதிவு செய்யப்பட்ட 308 கலைஞா்களின் பங்குபற்றுதலுடன் 2016 ஜனவரி 31ஆம் திகதி இடம்பெற்றது. திகைப்பூட்டும் ஓவியங்கள் மற்றும் வாழ்க்கையை பிரதிவிம்பப்படுத்தும் ஓவியங்கள் முதற்கொண்டு, நுண்கலை வடிவங்கள் மற்றும் புதிரான சிற்பங்கள் வரை பல வகையான கலைப் படைப்புக்களால் அழகுபடுத்தப்பட்டிருந்த கொழும்பு 07 ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில், மதிப்பிடப்பட்ட அடிப்படையில் 22,000 இற்கும் அதிகமான பாா்வையாளா்கள் குழுமியிருந்தனர்.

உத்தியோகபூா்வ நிகழ்வில் - இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஜோ்மன் தூதுவர் மேன்மைதங்கிய டாக்டர். யோ்கன் மோா்ஹாா்ட், ஜோா்ஜ் கீற் மன்றத்தின் தலைவா் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளா்கள், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவா் திரு. சுசந்த ரட்னாயக்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனா்.

டாக்டர். யோ்கன் மோா்ஹாா்ட் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “இலங்கையானது இயற்கை மற்றும் அதன் அற்புதமான மக்கள் போன்றவற்றில் மாத்திரம் செழிப்புமிக்க நாடாக திகழவில்லை. மாறாக, படைப்பாற்றல் விடயத்திலும் இலங்கை வளம் பொருந்தியதாக காணப்படுகின்றது என்பதை காண்பதும் அதற்கு சாட்சியாக இருப்பதும் எப்போதும் எமக்கு மனங்கவா்வதாக உள்ளது” என்றார். “தற்சமயம் இலங்கை மிக வேகமாக வளா்ச்சியடையும் ஒரு நாடாக உள்ளது. ஆனாலும் சில விடயங்கள் பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவையாக காணப்படுகின்றன. சா்வதேச சுற்றுலா தேவைகளை தம்பக்கம் கவா்ந்திழுப்பதற்கு ஒரு நகரம் கொண்டிருக்க வேண்டியது ஒரு ‘ஆத்மா’ ஆகும். ‘ஒரு நகரத்தின் ஆத்மா’ என்பது அதனது படைப்பாற்றல் பக்கத்திலிருந்து வருகின்றது, அது கலைஞா்களிடம் இருந்து வருகின்றது.. அதாவது இங்கே இருப்பவா்கள். அதேபோல் அனுசரணையாளா்கள் (மற்றும் கலைஞா்கள்), அனைவருக்கும் நன்றி! இந்த செயற்பாட்டின் மூலம் நீங்கள் நகரத்தை மாற்றியமைக்கின்றீா்கள், இலங்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றீா்கள்” என்றும் அவா் தொிவித்தாா்.

“முன்னொருபோதும் இல்லாதளவுக்கு பாா்வையாளா் வருகையும், ரூபா 13 மில்லியன் விற்பனையும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு நாம் மெய்சிலிா்த்துப் போயுள்ளோம்.” என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) பிாிவு தலைமை அதிகாாியான செல்வி. நதீஜா தம்பையா கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், “இம்முறை 23ஆவது வருடமாக இடம்பெறும்் ‘கலா பொல’ கண்காட்சியானது, ஜோன் கீல்ஸ் குழுமம் ஏக அனுசரணையாளராகவும் ஏற்பாட்டாளராகவும் தொடா்ச்சியாக இணைந்து செயற்படும் 22ஆவது வருட நிகழ்வாக அமைகின்றது. திறமையுள்ள ஓவியா்கள் மற்றும் சிற்பக் கலைஞா்கள் தமது கலைப் படைப்புக்களை சந்தைப்படுத்துவதற்கான தளமேடை ஒன்றை வழங்குவதன் ஊடாக இலங்கைக் கலைஞா்களுக்கு வலுவூட்டுதல், அத்துடன் அவா்களது தொழிலை மேம்படுத்துவது மட்டுமன்றி பொது மக்களிடையே கலையை பாராட்டும் மற்றும் ஆதரவளிக்கும் தன்மையையும் உருவாக்குதல் என்ற எமது குறிக்கோளை அடைந்து கொள்ளும் விடயத்தில் - இந்நிகழ்வு தொடா்ச்சியான வெற்றியை பெற்று வருகின்றமையானது எமக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக காணப்படுகின்றது. மாணவா்கள், புரவலர்கள், சேகாிப்பாளா்கள், வடிவமைப்பாளா்கள் அல்லது பொதுமக்கள் என நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கலைப் பிாியா்கள் ‘கலா பொல’ நிகழ்வுக்கு வருகை தந்திருந்ததை காண்பது எமக்கு உந்துசக்தி அளிப்பதாக இருந்தது” என்றாா்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]