புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 

முன்னாள் இராணுவத் தளபதியின் பாராளுமன்ற உரையை அலட்சியமாக எடுத்தவிட முடியாது:

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையெனில் எப்போது இறந்தார்

இறந்தால் அவரது உடலுக்கு என்ன நடந்தது? தெளிவுபடுத்துவது அரசின் பொறுப்பு என்கிறார் சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா, அப்படி உயிருடன் இல்லையாயின் அவர் எப்போது இறந்தார், அவ்வாறு இறந்துவிட்டார் எனில் அவரது உடலுக்கு என்ன நடந்தது என்பதை இன்றைய நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
முன்னாள் இராணுவத் தளபதியான இந்நாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதி யுத்தம் நடைபெற்று அது முடிவுற்றதாக மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கும்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்ததாக இந்நாட்டின் அதிஉயர் சபையான பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதனை வெறுமனே அரசியல் கருத்தாக அல்லது பாராளுமன்ற உரையாக எடுத்தவிட முடியாது. இது மிகவும் பாரதூரமான விடயம். எனவே இது குறித்து அரசாங்கம் உண்மையான

விவரம்»


 

பிரதேச அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்து மல்வத்தைபீட மகாநாயக்க தேரரரையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். (படம்: எஸ். கிஷாந்தன்) 

 

ஈழத்தமிழருக்கு ஆதரவானவர் நடிகர் போஸ்:

தமிழக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை

(சென்னையிலிருந்து சுரேன்)
ஈழத் தமிழருக்கு ஆதரவாகச் செயற்பட்டுவரும் தென்னிந்திய பிரபல குணச்சித்திர நடிகர் வெங்கட் போஸுக்கு எதிர்வரும் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை தி.மு.க தலைவர் கலைஞர் மு. கருணாநிதி வழங்க வேண்டுமென ஈழத்தமிழர் நலன்சார் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நடைபெறவுள்ள தமிழக சட்ட சபைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில்

விவரம்»

Other links_________________________

அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று கண்டியில்

பூரண அரச மரியாதை: தேசிய
துக்க தினமாகவும் பிரகடனம்

கண்டி அஸ்கிரிய பௌத்தபீட மாநாயக்க தேரர் சங்கைக்குரிய கலகம ஸ்ரீஅத்ததஸ்ஸி தேரரின் திருவுடலுக்கு பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய தினத்தை நாட்டின் தேசிய துக்கதினமாகவும் அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் சகல அரச கட்டடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. . . .

விவரம்»

மலையகத்தில் இன்று

கையெழுத்து வேட்டை

சம்பள உயர்வு கோரி JVP ஏற்பாடு

மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று ஞாயிறு ஒரே நேரத்தில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ள இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையானது இன்று காலை 10 மணியளவில் இராகலை, இரத்தினபுரி, மாத்தறை, தெனியாய, கேகாலை, பலாங்கொடை, புலத்ஹோப்பிட்டிய, அட்டன், தலவாக்கலை, போன்ற பிரதான நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ம.வி.முவின் தொழிற்சங்கப் பிரிவு பொருளாளர் கிருஸ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள  . . . .

விவரம்»

பவதாரணி, பவித்ராவின்

பரதநாட்டிய அரங்கேற்றம்

செல்வி பவதாரணி மகேஸ்வரன் மற்றும் செல்வி பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 20ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகவும், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கௌரவ அதிதியாக வும் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீமதி.....           விவரம்»


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.