மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27
SUNDAY FEBRUARY 07, 2016

Print

 
சேலைகளுக்கான பிரத்தியேக கரும பீடம் ஃபெஷன் பக்கில்

சேலைகளுக்கான பிரத்தியேக கரும பீடம் ஃபெஷன் பக்கில்

நாடெங்கிலும் 16 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள, இலங்கையின் முன்னணி சில்லறை விற்பனை நிலையமான ஃபஷன் பக், அதனது சேலைகளுக்கான பிரத்தியேக கரும பீடமான ‘Ethnic Fusion’ இனை அண்மையில் அதன் கட்டுப்பெத்தை கிளையில் ஆரம்பித்து வைத்தது. இந்நிகழ்வுக்கு பிரதமர் அலுவலக பிரதிப் பிரதம அதிரகாரியான திருமதி ரோஸி சேனநாயக்க பிரதம அதிதியாகவும், இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் ரீ.எம் டில்ஷான் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா திலினி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் நடிகைகளான சபீதா, சங்கீதா மற்றும் சசினி அயேந்ரா, சிகை அலங்கார நிபுணர்களும் அழகுக்கலை நிபுணர்களுமான ரமணி பெர்ணான்டோ, ஜெரால்ட் சொலமன்ஸ், ரம்ஸி ரஹ்மான், வடிவமைப்பாளர்களான யோலண்டா அலுவிஹார மற்றும் லௌ சிங் வொங் ஆகியோருடன் ஃபாஷன் துறைசார் நிபுணர்கள் பலரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.

அத்துடன அன்றைய தினம் ஃபஷன் பக்கில் ஆடைகளைக் கொள்வனவு செய்தோருக்கு வழங்கப்பட்ட 15% விலைக்கழிவானது அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதாய் அமைந்தது.

ஃபஷன் பக்கின் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேலைகளுக்கான பிரத்தியேக கருமபீடமான ‘Ethnic Fusion’ இல், சேலைகள், சல்வார்கள், சல்வார் துணிவகைள், குர்த்தாக்கள் மற்றும் துப்பட்டாக்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் 'எங்கள் காட்சியறைகளில் இதுவரைகாலமும் காட்சிப்படுத்திய கண்கவர் சேலைகள், சல்வார் வரிசைகள் பற்றி அனேகர் அறிந்திருக்கவில்லை. அதனாலேயே அதற்கென தனித்துவமான கருமபீடத்தினை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்'என்றார் ஃபஷன் பக்கின் பணிப்பாளர் ஷபீர் சுபியான்.

ஃபஷன் பக்கின் அனைத்து விற்பனை நிலையங்களும், பல்வேறுபட்ட நவீன வடிவமப்புகளிலான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் ஆடைகளைக் கொண்டிரு ப்பதோடு, படுக்கை விரிப்புகளும் அங்கு விற்பனைக்கு ண்டு. கீழைத்தேய மேலைத்தேய ஆடைகள், ஆடை வடிவமைப்பாளர்களினால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சேலைகள், சல்வார்கள், குர்த்தாக்கள் மற்றும் கைப்பைகள், சப்பாத்துக்கள் என பல்வேறுபட்ட நிறங்களிலான தேர்வுகள் அங்குண்டு.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]